முந்தய பக்கம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இருளர் பழங்குடியினர் தர்ணா

17 Jun 2026, 1:22 am
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில்  இருளர் பழங்குடியினர் தர்ணா

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இருளர் பழங்குடியினர் தர்ணா

விழுப்புரம்,ஜூன் 16-விழுப்புரம் மாவட்டம், அனிச்சம்பாளையம் இருளர் பழங்குடியின மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த டிசம்பரில் மனு அளித்தனர். நிலம் தேர்வு செய்யப்பட்டு விசாரணை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி பணி கிடப்பில் போடப்பட்டது.

தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரைச் சந்தித்தபோது, மனு தொலைந்துவிட்டதாக அலட்சியமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பழங்குடி

மக்கள், குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டா வழங்கவும், அலட்சியமாகச் செயல்பட்டஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்திய தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram