முந்தய பக்கம்

கன ரக வாகனங்களால் அடிக்கடி விபத்து மரண பயத்துடன் நடமாடும் மக்கள்

24 Sept 2026, 2:11 am
கன ரக வாகனங்களால் அடிக்கடி விபத்து மரண பயத்துடன் நடமாடும் மக்கள்
<p><strong>கன ரக வாகனங்களால் அடிக்கடி விபத்து மரண பயத்துடன் நடமாடும் மக்கள்</strong></p><p>விழுப்புரம், செப்.23-விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை, பெரும்பாக்கம், உறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் அதிகளவில் அப்பகுதி சாலைகளில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் உயிர் பயத்துடன் அப்பகுதி மக்கள் திருவக்கரை சாலையில் பயணிக்கின்றனர். அதனால் அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை மனு கொடுக்க வந்த அப்பகுதி மக்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram