தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல்லுக்கு ரூ.3500 கரும்புக்கு ரூ.5000 வழங்க தவிச மாநாட்டில் வலியுறுத்தல்

9 hours before
நெல்லுக்கு ரூ.3500 கரும்புக்கு ரூ.5000 வழங்க தவிச மாநாட்டில் வலியுறுத்தல்

நெல்லுக்கு ரூ.3500 கரும்புக்கு ரூ.5000 வழங்க தவிச மாநாட்டில் வலியுறுத்தல்

விழுப்புரம், ஆக.24-விழுப்புரம் மாவட்டம், கெடாரில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் நெல்லுக்கு ரூ.3500 கரும்புக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட 25-வது மாநாடு கெடாரில் மாவட்ட துணைச் செயலாளர் வி.எழில்ராஜா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் பி.சிவராமன் வரவேற்றார், மாவட்ட துணைச் செயலாளர் கே.மாதவன் சங்கக் கொடி ஏற்றினார். மாநில தலைவர் டி.ரவீந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ஏ.நாகராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் ஆர்டி.முருகன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.மாநில செயலாளர் சாமி.நடராஜன் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைச் செய லாளர் கே.கோவிந்தசாமி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

மாநாட்டில் விவசாய கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமை யாக தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் மின் இணைப்புக்காக பதிவு செய்துள்ள அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.ஆதார விலை சட்டம்,வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும். நெல்லுக்கு குவிண்டால் ரூ.3,500 மற்றும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வார சிறப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், விழுப்புரம் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரைப்பதற்கு நவீன அரிசி ஆலை தொடங்கிட வேண்டும். சூரிய ஒளி மின் வேலி அமைக்க வேண்டும்

என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் 31- பேர் கொண்ட விழுப்புரம் மாவட்ட குழுவின் தலைவராக பி.சிவராமன், செயலாளராக ஆர்டி.முருகன், பொருளாளராக வி.உமாமகேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.