விவசாயிகள் விலை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
29 Oct 2026, 11:31 pm

விவசாயிகள் விலை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம், அக்.29-விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகள் விவ சாயிகள் விளை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்டி.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியா பாரிகள் கொள்முதல் செய்யாமல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே வியாபாரிகள் கொள்முதல் செய்யப்படும் வேளாண் விலை பொருட்களுக்கு உரிய பணத்தை வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செலுத்தி அதன் பிறகு விவ சாயிகளின் வங்கிக் கணக்கில் வர வைக்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு வழிகாட்டுதல்படி செய்யப் பட்டு வந்தது ஆனால் தற்போது வியாபாரிகளே தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து விவ சாயிகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால் வியாபாரிகள் நேரடியாக விவ சாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துகிற போது அவர்களுக்கு வங்கிக் கட்டணம் ஏற்படுவ தாக சொல்லி இந்த நடைமுறையை ஏற்க முடியாது என்று கடந்த ஒரு வாரங்களுக்கு மேல் விவசாயிகள் கொண்டு வருகின்ற விளை பொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்யாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

எனவே மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் தலையிட்டு விவசாயிகளின் விளைபொருட்களை உடனடியாக கொள்முதல் செய்ய உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் விழுப்புரம் மாவட்ட குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் .இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.