முந்தய பக்கம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: மாற்றுத்திறனாளிகள் 500 பேர் கைது

11 Feb 2026, 6:11 pm
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: மாற்றுத்திறனாளிகள் 500 பேர் கைது
<p><strong>விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: மாற்றுத்திறனாளிகள் 500 பேர் கைது</strong></p> <p>விழுப்புரம், பிப்.11- விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக நுழைவாயில் முன்பு புதனன்று இரண்டாவது நாளாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் போரா ட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அரசு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாவட்ட தலைவர் ஜி.ஜெயக்குமார், மாவட்டத் துணைத் தலை வர்கள் அய்யனார், மும்மூர்த்தி ஆகியோர் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram