முந்தய பக்கம்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

16 Jul 2026, 11:55 pm
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>விழுப்புரம், ஜூலை 16– விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஜெயகுமார் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் எம்.யுகந்தி முன்னிலை வகிக்க, மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர்கள் பி.முருகன், பி.அய்யனார், எம்.மும்மூர்த்தி, டி.மணிகண்டன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் எஸ்.செல்வி, பி.கௌரி, சி.குமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram