இரண்டு பட்டியலின இளைஞர்கள் மீது சாதி வெறியர்கள் கொலைவெறி தாக்குதல் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் கடும் கண்டனம்
24 Sept 2026, 2:37 am

இரண்டு பட்டியலின இளைஞர்கள் மீது சாதி வெறியர்கள் கொலைவெறி தாக்குதல் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் கடும் கண்டனம்

விழுப்புரம், செப்.23-விழுப்புரம் மாவட்டம், வீர சோழபுரத்தில் சாலையில் வாகனத்திற்கு வழிவிடக் கேட்ட இரண்டு பட்டியலின இளை ஞர்கள் மீது சாலையில் வாக னங்களுக்கு வழிவிடாமல் சாலையை அடைத்துக்கொண்டு விநாயகர் ஊர்வலம் நடத்திய ஆதிக்க சாதியினரால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலை சிபிஎம் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்ற

வாளிகள் அனைவர் மீதும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், வீர சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞர்கள் ஜெகன்குமார் மற்றும் அழகப்பன் ஆகியோர், ஆயந்தூர் வழியாக மினி சரக்கு வாகனத்தில் சென்ற போது விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக போக்குவரத்துத் தடை ஏற்பட்டது.

நீண்டநேரம் காத்திருந்த நிலையில் ஹாரன் அடித்து கொஞ்சம் வழி விடுங்க நாங்க திருமணத்திற்கான சீர்வரிசைப் பொருட்களை எடுத்துச்செல்லப் போகிறோம். கொஞ்சம் அவசர

மாக போகணும் என்று தாழ்மை யாக பட்டியலின இளைஞர் ஜெகன்குமார் கேட்டுள்ளார். அதற்கு, ஊர்வலத்தில் இருந்த ஆதிக்க சாதியினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நீங்கள் யார் என்றும், அவர்கள் வீர

சோழபுரம் என்று கூறியதும், நீங்கள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக என்று சாதி பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி இரண்டு இளை ஞர்களையும் 50 க்கும் மேற்பட்ட ஆதிக்கசாதியினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட வர்களில் 14 பேரை மட்டும் பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரித்து வெறும் ஆறு பேர் மீது மட்டுமே காணை காவல் நிலையத்தினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதில் மூன்று பேரை மட்டுமே கைது செய்து வழக்கம்போல் கபட நாடகம் ஆடியுள்ளனர். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும். படுகாயமுற்ற பட்டியலின இளை ஞர்களுக்கு தரமான உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறையை வலியுறுத்துகிறோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சாதிய மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் மாவட்ட காவல்துறை மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறது. இது மாவட்டத்தில் சாதிய மோதல் களை ஊக்குவிக்கும் விதமாக அமைகிறது என்று சிபிஎம் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஆதிக்க சாதி வெறியர்களின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்கள் மீதே காவல்துறை கொலை முயற்சி வழக்கு போட்டு உள்ளனர். இது சாதி வெறியர்களின் ஆணவப் போக்கை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.

இதில் காவல்துறை நடவடிக்கை என்பது குற்றவாளிகளை பாதுகாப்பதாக இருக்கிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. மற்றும் காவலர் உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்து மோதலை தடுக்க கூடுதல் காவலர்களை வரவைத்து மோதலை தடுத்து, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதால்தான். அங்கு இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மாவட்ட காவல்துறை மாவட்டத்தில் சாதிய மோதல்கள் ஏற்படாதவாறு தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் காவல்துறையை வலி யுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.