தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

2 hours before
சென்னை விரைவு செய்திகள்

சேமங்கலத்தில் மக்கள் தொடர் திட்ட முகாம்

விழுப்புரம், நவ.10- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சேமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சி யர் தலைமையில் மக்கள்தொடர்பு திட்ட முகாம் இன்று (நவ.11புதன்கிழமை) நடை பெற உள்ளது. இந்த முகாமில் விழுப்புரம் மாவட்டத்தைச்சேர்ந்த அனைத்து துறை அலுவ லர்களும் கலந்து கொள்கின்றனர்.

விபத்தில் 2 பேர் பலி

கடலூர், நவ.10-கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் நத்தமடு கிராமத்தைச் சேர்ந்த நரேஷ்(26), அவரது நண்பர் தமிழ ரசன் (24) ஆகிய இருவரும் திங்கள் கிழமை இரவு காட்டுமன்னார்கோவிலில் இருந்து இருசக்கரவாகனத்தில் சேத்தியாத் தோப்பு நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது கூளப்பாடி அருகே எதிரேவந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்த னர். இதில் நரேஷ் சம்பவஇடத்திலேயே உயிரி ழந்தார். இதேபோல், கும ராட்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அப்பாசாமி (90)என்பவர் உயிரிழந்தார்.

தொட்டுவிடும் தூரத்தில்அபாயம்: தடுக்க அவசர நடவடிக்கை தேவை

உளுந்தூர்பேட்டை, நவ.9-கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி செல்லும் சாலையில் வலது பக்கமாக உள்ள விவசாய நிலத்தில் இருந்து அடுத்த விவசாய நிலத்திற்கு மின்சாரம் எடுத்துச் செல்ல விளைநிலங்கள் உள்ள பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதில் இருந்து மின்கம்பிகளும், சில இடங்களில் உயர் அழுத்த மின்கம்பிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அந்த பகுதியில் மின்சார கம்பிகள் அமைத்து பல ஆண்டுகளாகி விட்டது. இந்த மின்கம்பிகளை மாற்றி புதிய மின்கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் இணைக்கவில்லை.

இதனால் இந்த மின்கம்பிகள் பல இடங்களில் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. இந்த தாழ்வான கம்பிகள் இருக்கும் பகுதியை ஒட்டியே கரும்பு பயிர்களும் உள்ளது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் இருக்கும் அந்த பகுதியில் உள்ள வயல்வெளி கரம்பில் மாடுகளும் மேய்கிறது.

தற்போது மழைக்காலம் என்பதால் ஏதாவது மின் விபத்து ஏற்படும் முன் இதனை சரிசெய்ய மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மின்பாதையை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.