முந்தய பக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம்

9 hours before
விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம்

விழுப்புரம், ஆக.24-விழுப்புரம் மாவட்டம், கெடாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கம் (ஆக.24) திங்கள்கிழமை தொடங்கியது.

கெடார் கடை வீதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்டி.முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் மக்களை நேரில் சென்று சந்தித்து நோட்டீஸ் வழங்கினர்.

நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் எஸ்.கணபதி,மாவட்ட குழு உறுப்பினர் பி.சிவராமன், ஏ.நாகராஜன், தவிச தேவநாதன், விதொச எஸ்.அபிமன்னன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram