குறைதீர்க்கும் கூட்டத்தில் 729 மனுக்கள் பெறப்பட்டன
12 Aug 2026, 1:23 am

குறைதீர்க்கும் கூட்டத்தில் 729 மனுக்கள் பெறப்பட்டன

விழுப்புரம், ஆக.11-விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 729 பேரிடம் மனுக்களை பெற்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், உதவி ஆணையர் (கலால்) ராஜூ, மாவட்ட பிற்படுத் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நடராஜன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.