விழுப்புரத்தில் வட்டாட்சியரிடம் விதொச மனு
2 Oct 2026, 2:34 am
<p><strong>விழுப்புரத்தில் வட்டாட்சியரிடம் விதொச மனு</strong></p><p>விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், காடகனூர் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு 1996-ம் ஆண்டு வழங்கப்பட்ட 158 இலவச வீட்டுமனை பட்டாக்கள் 30 ஆண்டுகளாக அளவீடு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதை உடனடியாக அளவீடு செய்து வீட்டுமனைகளை ஒப்படைக்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் (அக்.1) வியாழக்கிழமை மாலை கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் எம்.சாருமதியிடம் மனு அளித்தனர். மனு அளிக்கும் நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.கீதா, எஸ்.கணபதி, எம்.ஏழுமலை (சிபிஎம்), எம்.பாபு, டி.குப்பன், அந்தோணியம்மாள் என்.பழனி எம்.எல்லப்பன் (விதொச), எ.முருகானந்தம் (தவிச) உள்ளிட்ட 158 பயனாளிகள் கலந்து கொண்டனர்.</p>
