விழுப்புரம்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில்
17 Feb 2026, 3:36 pm
<p>விழுப்புரம்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வழங்கப்படாமல் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் எம்.புருசோதமன் (திட்டத் துணைத் தலைவர்), ஆர்.அருள் (திட்டச் செயலாளர்), ஏ.முருகானந்தம் (திண்டிவனம்), ஏ.கன்னியப்பன் (செஞ்சி), எம்.வீரமுத்து (கண்டமங்கலம்), ஜி.கண்ணன் (திட்டப் பொருளாளர்), ஜி.அசோக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.</p>
