ஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டங்களில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு
yesterday
<p><strong>தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டங்களில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு</strong></p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில், தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில், பூதலூர் தெற்கு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருவோணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 84 சந்தாக்கள், தீக்கதிர் சிறப்பாசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்திடம் வழங்கப்பட்டன. நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், தீக்கதிர் மாவட்டப் பொறுப்பாளர் ஆர். மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p><p>விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டியிடம், தீக்கதிர் சந்தாவுக்கான காசோலையை வட்டச் செயலாளர் டபுள்யு. ஆல்பர்ட் வேளாங்கண்ணி வழங்கினார். இந்த நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் கீதா, மாவட்டச் செயலாளர் என். சுப்ரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.டி. முருகன், வட்டக்குழு உறுப்பினர் ஜி. சுப்பிரமணியன் மற்றும் கிளைச் செயலாளர்கள் ஐ. சகாதேவன், டி. அரவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
