காலிக் குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
18 Jul 2026, 9:16 pm
<p><strong>காலிக் குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்</strong></p><p>திருச்சுழி, ஜூலை 18- சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் சாலை இலுப்பைகுளம் ஊராட்சிக்கு உட் பட்டது சொட்டமுறி கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு நீண்டகால மாக உப்புத் தன்மையுடைய குடிநீர் வழங் கப்பட்டுள்ளது. இதனால், பெண்கள், குழந் தைகள் உள்ளிட்டோருக்கு சிறுநீரக பாதி ப்பு, உப்புச்சத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். அது வரை வரும் குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வாசுகி மற்றும் காவல்துறையினர் பொதுமக்களு டன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். சொட்டமுறி கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும் குடிநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வா கத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். விரைவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத் தின் மூலம் நீர்த் தேக்கத் தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். </p>
