ரெட்டியார் பேட்டையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>ரெட்டியார் பேட்டையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்</strong></p>
<p>கடலூர், டிச.10- கடலூர் அருகே உள்ள ரெட்டியார் பேட்டையில் அரசு பேருந்துகளை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார் பேட்டை கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லுபவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரெட்டியார்பேட்டைக்கு வரக்கூடிய தடம் எண் 31 அரசு பேருந்து அடிக்கடி பழுதடைந்து நின்று விடுவதால் பயணம் செய்யும் மக்கள் கடும் சிரமத்துக்குள் ஆளாகின்றனர். மேலும் மழை நேரங்களில் பேருந்துக்குள் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்தாலும் முழுவதுமாக நடந்து விடுவதாக பேருந்தில் பயணித்தவர்கள் குற்றம் சாட்டினர். கிராம பொதுமக்கள் புதிய பேருந்து கேட்டு கடந்த 8 மாதத்தில் பலமுறை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நட வடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு முறை மனு கொடுக்கும் போதும் புதிய பேருந்து வந்தவுடன் உங்களுக்குத்தான் முன்னுரிமை என்று கூறி அதிகாரிகள் அனுப்பி விடுகின்றனர். ஆனால் வருகின்ற புதிய பேருந்தை வேறு பல கிராமங்க ளுக்கு அனுப்பி விடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். பழுதாகி உள்ள பழைய பேருந்தை மாற்றி புதிய பேருந்து விட வலியுறுத்தி கிராம மக்கள் அரசு பேருந்துகளை சிறை பிடித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த புதுச்சத்திரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். அரசு போக்குவரத்து கழக அதிகாரி களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் 5 நாட்களுக்குள் புதிய பேருந்து ரெட்டியார் பேட்டை கிராமத்திற்கு விடப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.<br />
</p>
