தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை துரித படுத்த கிராம மக்கள் கோரிக்கை

23 Feb 2026, 6:26 pm
பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை துரித படுத்த கிராம மக்கள் கோரிக்கை
<p><strong>பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை துரித படுத்த கிராம மக்கள் கோரிக்கை</strong></p> <p>செங்கல்பட்டு, பிப். 23- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக் குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட நெரும்பூர்- இரும்புலிச்சேரி கிராமங்களுக்கு செல்லும் வகையில், பாலாற்றின் குறுக்கே தரைப் பாலம் அமைந்திருந்தது. இப்பாலம் கடந்த 2015ஆம் ஆண்டு பாலாற்றில் ஏற்றபட்ட வெள்ளப்பெருக்கில் முற்றிலும் சேத மடைந்தது. இதனால், இரும்புலிச்சேரி கிராம பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப் பட்டு கிரமத்திலேயே முடங்கினர். அதனால் பாலாற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு மேற்கண்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.40.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன்பேரில், மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மேம்பாலத்தின் கட்டு மான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பாலாற்றில் வெள்ளம் குறைந்ததால் மீண்டும் கட்டுமான பணிகள் வேகமெடுத்தன. இதனால், தற்போது 80 விழுக்காடு பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக தெரிகிறது. அதனால், உயர்மட்ட மேம் பாலத்தின் கட்டுமான பணிகளை விரைவு படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இரும்புலிச்சேரி கிராம மக்கள் கூறுகையில், பாலாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், ஆண்டுதோறும் எங்கள் கிராம மக்களின் போக்குவரத்து தடை பட்டு வருகிறது. இதனால், பள்ளி செல்லும் பிள்ளைகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது, உயர் மட்ட மேம்பால அமைக்கப்பட்டு வரும் நிலை யில், அதன் கட்டுமான பணிகளும் வெள்ளப் பெருக்கால் அவ்வப்போது தடைபட்டு வரு கிறது. அதனால், பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு விரைவாக பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.