முந்தய பக்கம்

ஊசுடு ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் சீரமைப்புக்கு கிராம மக்கள் கோரிக்கை

7 Dec 2025, 3:52 pm
ஊசுடு ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்  சீரமைப்புக்கு கிராம மக்கள் கோரிக்கை
<p><strong>ஊசுடு ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் &nbsp;சீரமைப்புக்கு கிராம மக்கள் கோரிக்கை</strong></p> <p>விழுப்புரம், டிச.7- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் முண்டியம்பாக்கத்திலிருந்து புதுச்சேரி மாநிலம் பத்துகண்ணு அருகே உள்ள ஊசுடு ஏரிக்கு காலம் காலமாக மழை மற்றும் நீர் வரத்து காலங்களில் தண்ணீர் செல்லும் வாய்க்கால் பரா மரிப்பின்றி சீரழிந்து வருகிறது. பழைய காலத்தில் பரந்த நீர் ஓடை யாக இருந்த இந்த வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அரசு பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி செய்யாத தால் முழுமையான சீரமைப்பு இல்லாமல் உள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக பரப்பளவு குறுகி ஓடையிலிருந்து வாய்க்காலாக மாறிவிட்டது. புதர் மற்றும் செடிகள் மண்டி அடைத்து நீர் செல்ல முடியாமல் அதிக நீர் வெளியேறும்போது விவசாய வயல்களில் ஆங்காங்கே பாய்ந்து சேதப்படுத்துவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். உடனடி யாக சம்பந்தப்பட்ட துறை வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பனப்பாக்கம், தொரவி, இராதாபுரம் உள்ளிட்ட வாய்க்கால் செல்லும் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மத்தியில் வலு வான கோரிக்கை எழுந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram