வழிபாட்டுத்தலத்தை பாதுகாக்க கிராம மக்கள் கோரிக்கை
11 Oct 2026, 1:25 am

வழிபாட்டுத்தலத்தை பாதுகாக்க கிராம மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, அக்.10-திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா, வீரனம் ஊராட்சிக்குட்பட்ட நாயக்கனூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக கிராம மக்கள் பஜனை கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வழிபாட்டு தலம் வழியாக தனிநபர் ஒருவரின் சொந்த இடத்திற்கு செல்வதற்கு பாதை அமைக்க வேண்டும் என தனிநபர் ஒருவர் அப்பகுதி மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், அந்த வழிபாட்டு தலம் வழியாக பாதை அமைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் அந்த வழக்கு விசாரணையில் அந்த இடம் வழிபாட்டுத் தலமாகவே பராமரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வந்துள்ளது.

இந்நிலையில், அந்த தனிநபர் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி வருவாய் துறை, காவல் துறையினர் மூலம் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே நாங்கள் நீண்ட காலம் வழிபட்டு வரும் வழிபாட்டுத் தலத்தை பாதுகாக்க வேண்டும் என நாயக்கனூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.