கிராமக் கோவில் பூசாரிகள் மாநாடு 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்
28 Feb 2026, 2:29 pm
<p><strong>கிராமக் கோவில் பூசாரிகள் மாநாடு 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்</strong></p>
<p>சென்னை, பிப்.28 - சென்னை மயிலாப்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடை பெற்ற கிராமக் கோவில் பூசாரிகள் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது உரையில் கூறியதாவது: உண்மையான ஆன்மீக அன்பர்க ளும் இறைப் பற்றாளர்களும் விரும்பக் கூடிய அரசுதான் திமுக அரசு. கிராம கோவில்களில் பணியாற்றும் பூசாரிக ளான நீங்களும் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கம்தான். உங்களுடைய வாழ்வி லும் விடியல் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நம்முடைய அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. ஒருகாலத்தில் கோவில் இருக்கின்ற தெருக்களில்கூட பலரால் நுழைய முடி யாத நிலை இருந்தது. அதை மாற்றி இன்றைக்கு கோவில்களுக்குள் அனை த்து மக்களும் வரலாம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம், அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்ய லாம் என்று மாற்றியிருக்கிறோம். இந்த மாற்றம்தான் நாம் விரும்புகின்ற சமூக முன்னேற்றம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, பூசாரிகளு க்கு மாதாந்திர ஊக்கத் தொகை காசோ லைகள், 10 பூசாரிகளுக்கு பூசை உப கரணங்கள், 2 பூசாரிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு தலா ரூ.12 ஆயிரம் மானியக் காசோலை, 3 பூசா ரிகளின் பிள்ளைகளுக்கு கல்வி உத வித்தொகை மற்றும் ஒரு பூசாரியின் வாரிசுதாரருக்கு குடும்ப நலநிதி ரூ.50 ஆயிரம் காசோலையும் வழங்கினார். 6 ஆயிரம் பூசாரிகளுக்கும் மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. புதிய அறிவிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளுக்கு அனைத்து உறுப்பினர்க ளுக்கும் புத்தாடை வழங்கப்படும். உறுப்பினர் மரணம் அடைந்தால் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும். ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிர மாக உயர்த்தப்படும். ஈமச்சடங்கு நிதி ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிர மாக உயர்த்தப்படும். அருகாமை திருக் கோவில்கள் மூலம் ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு புத்தொளிப் பயிற்சி நடத்தப்படும். திருமண நிதி உதவியில் பூசாரிக்கு ரூ.3 ஆயிரம், மகனுக்கு ரூ.3 ஆயிரம், மகளுக்கு ரூ.5,000 என்ற தொகைகளில் மேலும் ரூ.1,000 உயர்த்தப்படும். பள்ளிக் கல்வி நிதி உதவி மேலும் ரூ.1,000 உயர்த்தி, மகனுக்கு ரூ.2,000, மகளுக்கு ரூ.2,500 ஆக வழங்கப்படும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு நிதி உதவி ஆண்டுக்கு மேலும் ரூ.2,000 உயர்த்தப்படும். தொ ழில் சார்ந்த இளநிலை மற்றும் முது நிலை பட்டப்படிப்பு நிதி உதவியும் ஆண்டுக்கு மேலும் ரூ.2,000 உயர்த்தப் படும். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில ஆண்டுக்கு மேலும் ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும். மூக்குக் கண் ணாடி வாங்க வழங்கப்படும் நிதி உதவி ரூ.500-லிருந்து ரூ.1,000-ஆக உயர்த்தப் படும் உள்ளிட்ட 11 அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்தார். இந்த மாநாட்டில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆதீனங்கள் பங்கேற்றனர்.</p>
