முந்தய பக்கம்

கிராம சுகாதார செவிலியர் சங்கப் பேரவை

20 Feb 2026, 2:39 pm
கிராம சுகாதார செவிலியர் சங்கப் பேரவை
<p><strong>கிராம சுகாதார செவிலியர் சங்கப் பேரவை</strong></p> <p>கோவை, பிப்.20- தமிழ்நாடு கிராம சுகாதார &nbsp;செவிலியர் சங்கத்தின் கோவை மாவட்ட பேரவை யில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு கிராம சுகா தார செவிலியர் சங்கத்தின் கோவை மாவட்ட 6 ஆவது &nbsp;பேரவைக் கூட்டம் வியாழ னன்று கோவை தாமஸ் கிளப் பில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க &nbsp;கட்டிடத்தில், மாவட்டத் தலைவர் ஆர்.செல்வி தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் வி.ஜமுனா வரவேற் றார். மாவட்டச் செயலாளர் டி.மலர்செல்வி வேலை அறிக்கையை வாசித்தார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ச.ஜெகநாதன் துவக்கவுரையாற்றினார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதி களை படிப்படியாக நிறைவேற்றி வரும் நிலை யில், நமது அனைத்து துறை சங்கங்களின் பிர தான கோரிக்கையான பழைய ஒய்வூதிய திட்டத்தை முழுமையான செயல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மகப்பேறு மரணம், சிசு மரணம் &nbsp;ஆகியவற்றிக்கு கிராம சுகாதார செவிலி யரை முழு பொறுப்பாக்குவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மாநாட்டை வாழ்த்தி தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநில பொதுச் &nbsp;செயலாளர் வி.சுரேஷ் உள்ளிட்ட சகோதர சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர். &nbsp;இதனை தொடரந்து தமிழ்நாடு கிராம சுகா தார செவிலியர் சங்க மாவட்டத் தலைவராக &nbsp;செல்வி, செயலாளராக மலர் செல்வி, பொரு ளாளராக தங்கமணி, அமைப்பு செயலா ளர்களாக சந்திரலேகா, தேவிகா உள்ளிட்ட 25 &nbsp;பேர் தேர்வு செய்யப்பட்டனர். சங்க மாநில &nbsp;பொதுச் செயலாளர் ஏ.பிரகலதா நிறை வுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் டி. தேவிகா நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram