கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
16 Feb 2026, 2:37 pm
<p><strong>கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.16- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஈஞ்சர் கிரா மத்தில் கிராம நிர்வாக அலு வலர் மற்றும் உதவியாளரை தாக்கியதாக கூறப்படும் கூட லிங்கத்தை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு வட் டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத் தலைவர் செந்தில் மாயன் தலைமை தாங்கி னார். செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் நாராயண குமார், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். மாநில செயலா ளர் பாண்டியன் நிறைவுரை யாற்றினார். திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளைத் தலைவர் வேல்ராஜ் தலைமை தாங்க, கிளைச் செயலாளர் ராமசாமி மற்றும் பொருளாளர் மனோஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதேபோல் ராஜபாளை யம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
