முந்தய பக்கம்

கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்புப் போராட்டம்

28 Jan 2026, 2:33 pm
கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்புப் போராட்டம்
<p><strong>கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்புப் போராட்டம்</strong></p> <p>நாமக்கல், ஜன.28- திருச்செங்கோடு வட் டாட்சியர் அலுவலகம் முன்பு &nbsp;ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். கிராம நிர்வாகத்தின் முது கெலும்பாக திகழும் கிராம நிர்வாக அலுவ லகத்தை கழிப்பறை குடிநீர் மற்றும் இணைய &nbsp;வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய்யப் பட்ட கிராம நிர்வாக அலுவலகமாக அமைத்து &nbsp;தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமன முறையில் கல்வித் தகுதி பட்டப் படிப்பு என மாற்றிய மைக்க வேண்டும். பதவி உயர்வு என்பது &nbsp;எட்டாக்கனியாகவே உள்ளது. பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம &nbsp;நிர்வாக அலுவலர் எனவும், 20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் என வும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளி யிட வேண்டும். அதற்கேட்ப ஊதிய உயர்வும் &nbsp;வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவ லர்கள் சங்கத்தின் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று முதல் மூன்று நாட்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram