முந்தய பக்கம்

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க விளவங்கோடு வட்ட பேரவை

8 Jul 2026, 9:16 pm
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க  விளவங்கோடு வட்ட பேரவை
<p><strong>அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க விளவங்கோடு வட்ட பேரவை</strong></p><p>குழித்துறை,ஜூலை 8- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் விளவங்கோடு வட்டக்கிளையின் 9 ஆவது பேரவை குழித் துறையில் நடைபெற்றது. சங்கக் கொடியை சுகுமாரன் ஏற்றி வைத்தார். நாராயணபிள்ளை அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் தங்கமணி துவக்க உரையாற்றி னார். வட்டச்செயலாளர் ஜெயசிங் வேலை அறிக்கையும், வட்ட பொருளாளர் கனகராஜ் வரவு- செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். அரசு ஊழியர் சங்க குமரி மாவட்டச் செயலாளர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்துரை வழங்கினார். ஓய்வூதியர் சங்க குமரி மாவட்டச் செயலாளர் ஐவின், முன்னாள் மாநில துணைத்தலைவர் சுகுமாரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் அல்போன்ஸ் நிறைவு ரையாற்றினார். பிரசன்னகுமாரி நன்றி கூறினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 ரூபாய் அனைத்து ஒய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram