தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளாத்திகுளத்தில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து ரூ.30 லட்சம் மதிப்பில் சேதம்

4 Nov 2026, 10:44 pm
விளாத்திகுளத்தில் பழைய இரும்பு  குடோனில்  தீ விபத்து  ரூ.30 லட்சம் மதிப்பில் சேதம்

விளாத்திகுளத்தில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து ரூ.30 லட்சம் மதிப்பில் சேதம்

தூத்துக்குடி,நவ.4-விளாத்திகுளத்தில் உள்ள பழைய இரும்பு குடோனில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.30 லட்சம்மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் துரைப்பாண்டி (40). இவர் விளாத்திகுளம் - எட்டையாபுரம் சாலையில்பழைய இரும்பு கடை மற்றும் குடோன் நடத்தி வருகிறார்.நவம்பர் 4 அன்று அதிகாலையில் இவரது குடோனில் திடீரெனத் தீப்பற்றிஎரியத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே தீ மளமளவெனப் பரவி, அங்கிருந்த பழைய இரும்புப் பொருட்கள் மற்றும் பிற கழிவுப் பொருட்கள் எரியத் தொடங்கின.இதுகுறித்து தகவல் அறிந்ததும், விளாத்திகுளம், கோவில்பட்டி தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து, நீண்ட நேரம் போராடித் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட குடோனில் இருந்து வெறும் 10 மீட்டர் தொலைவிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும், தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையமும் அமைந்துள்ளன. தீ மேலும் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக, அருகிலிருந்த கட்டிடங்கள், தகரக் கூரைகள் மற்றும் மரங்களின் மீது தீயணைப்பு வீரர்கள் தொடர்ச்சியாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். இதனால் பெட்ரோல் பங்கிற்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்தத் தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்துக்கான காரணம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.