தேர்தல் ஆணையத்தின் ‘கெடுபிடி’ மார்ச் 27-க்குள் தீர்வு காணாவிடில் தொடர் ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா எச்சரிக்கை!
22 Mar 2026, 4:19 pm
<p><strong>தேர்தல் ஆணையத்தின் ‘கெடுபிடி’ மார்ச் 27-க்குள் தீர்வு காணாவிடில் தொடர் ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா எச்சரிக்கை!</strong></p>
<p>சென்னை, மார்ச் 22- தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிக ளால் வணி கர்கள், பொதுமக்கள் அவதிக்கு மார்ச் 27-க்குள் தீர்வு காணாவிடில் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட் டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா செய்தி யாளர்களிடம் கூறுகை யில், தமிழக தேர்தல் விதி நடைமுறைகள் அம லாக்கத்தினால், சிறு, குறு வணிகர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை ரொக்கப்ப ணம் பறிமுதல், பொருட்கள் பறிமுதல், தங்கம், வெள்ளி நகை கள் பறிமுதல், தக்காளி வியாபாரி பணம் பறிமுதல் என பலதரப்பட்ட வணிகர்க ளிடமிருந்து வணிகம் சார்ந்த ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கைகளை, தற்கால பொருளாதார நடை முறைக்கு ஏற்ப தளர்வு கள் அளிக்கக் கோரி மாநில தலைமை தேர்தல் அதி காரிக்கு பேரமைப்பு கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் தணிக்கையில் ஈடு படும் அதிகாரிகள், தவறான உள்நோக்கத்துடன் பறிமுதல்செய்யும் நட வடிக்கை களை எதிர்த்தும், கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களை உடனடியாக திருப்பித் தரு வதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக தேர்தல் அதிகாரி களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டி ருப்பதை சுட்டிக்காட்டவும், நடைமுறைகளை தளர்த்தக் கோரியும் மீண்டும் ஞாயி றன்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அளிக்கப் பட உள்ளது, வரும் 27ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணை யமும், அதிகாரிகளும் கோரிக்கைகளை ஏற்கா விடில் மாவட்டங்கள் தோறும், தேர்தல் நடை முறை விதிகளை எதிர்த்து பேரமைப்பு ஆர்ப்பாட்டங் களை முன்னெடுக்க உள்ளது. தேர்தல் கையூட்டு நடைபெறும் இடங்க ளில் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல், மக்கள் நெருக் கடி மிகுந்த மார்க்கெட்க ளிலும், கடைதெருக்களி லும், மக்கள் வசிக்கின்ற தெருக்களிலும், ரயில் நிலை யங்களிலும், பேருந்து நிலையங்களிலும் ஆய்வு செய்வது ஏற்புடைய தல்ல. மேலும், பறிமுதல் செய்யப்படும் ரொக்கத்தை திரும்பப் பெறும் வழி காட்டலில் 4, 5 அதிகாரி கள் என்றில்லா மல், ஒரே அதிகாரியின் செயல்பாட்டில் கொண்டுவர வேண்டுகிறோம். மேலும், வளைகுடா போர் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச் சந்தையில் வணிக எரிவாயு சிலிண் டர்கள் விற்பதை நுகர்பொருள்விநியோகத் துறை சார்ந்த அதிகாரிகள், தீவிர களஆய்வு செய்து கள்ளச்சந்தை விற்ப னையை முடிவுக்கு கொண்டுவர ஆவன செய்து, சாமானிய உணவகங்கள், டீக்கடை கள், பேக்கரிகள், திருமண மண்டப சமை யலர்கள், எம்.எஸ்.எம்.இ. செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பவும், மரபுசாரா தொழி லாளர்களின் வேலை இன்மையை போக்கிடவும் அரசு துரித நடவடிக்கை எடுக்கு வேண்டும். இவ்வாறு கூறினார்.</p>
<p> </p>
