தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘செங்கொடியிடம் தோற்றுக் கொண்டிருக்கும் மோடி அரசு’ - டாக்டர் விஜு கிருஷ்ணன் முழக்கம்

28 Sept 2026, 9:46 pm
‘செங்கொடியிடம் தோற்றுக் கொண்டிருக்கும் மோடி அரசு’ - டாக்டர் விஜு கிருஷ்ணன் முழக்கம்

‘செங்கொடியிடம் தோற்றுக் கொண்டிருக்கும் மோடி அரசு’ - டாக்டர் விஜு கிருஷ்ணன் முழக்கம்

தூத்துக்குடி, செப்.29 -செங்கொடி இயக்க விவசாயிகளிடம் பிரதமர் மோடி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் விஜு கிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் துவங்கியுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-ஆவது மாநில மாநாட்டுப்

பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.

மோடி ஆட்சிக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகியும் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டிய விஜு கிருஷ்ணன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைப்படி உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதவீதம் கூடுதல் விலை, மானிய விதை-உரம், குறைந்த வட்டிக் கடன், கடன் தள்ளுபடி, விவசாயத் தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலை, பயிர்க் காப்பீடு, பாசன வசதி உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார். இந்த அரசு பொய் மட்டுமே கூறுகிறது என்பதுஓராண்டில் புரிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

போராட்டங்களும் வெற்றிகளும்

மோடி ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் விவசாயிகளின் நிலங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சட்டத்தைக் கொண்டுவந்ததாகவும்,விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தால் அதைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். 2020-இல் அனைவரையும் கோவிட் ஊரடங்கில் தள்ளிவிட்டுக் கார்ப்பரேட் கொள்ளைக்குவழிவகுத்தவர் மோடி எனக் குற்றம் சாட்டிய அவர், உரிமைகளைப் பறிக்க கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள், 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக ஓராண்டுக்கு மேல் நடத்தியபோராட்டத்தில் 736 விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்ததாகவும், அந்த ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்ததாகவும் தெரிவித்தார். விளைபொருளுக்குக் குறைந்தபட்ச விலைஉள்ளிட்ட கோரிக்கைகளுடன் மும்பை நோக்கி நடைபயணமாக வந்த விவசாயிகளிடம் மகாராஷ்டிர பாஜக அரசு தோற்று, அனைத்து 12 கோரிக்கைகளையும் ஏற்ற நிலையை செங்கொடி இயக்கம் ஏற்படுத்தியதை அவர் நினைவுகூர்ந்தார்.

வேலை கேட்டுப் போராடிய இளைஞர்கள் மீது மோடி அரசு தடியடி நடத்தியதாகவும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அந்த இளைஞர்களையும் மாணவர்களையும் ‘கரப்பான் பூச்சிகள்’ என்று குறிப்பிட்டதாகவும் விஜு கிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். எனினும், நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் இணைந்து போராடி கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்ததாகவும், 2020-21 விவசாயப்போராட்டமேஇளைஞர்களின் இப்போராட்டத்திற்கு அடித்தளம் அமைத்ததாகச் சிஜேபி தலைவர் ஒரு விவசாயிகள் கூட்டத்தில் கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார். அப்போராட்டத்திற்கு மூளையாக வும்முதுகெலும்பாகவும் செயல்பட்டது அகில இந்திய விவசாயிகள் சங்கமே என்றும், நிஜாம் மன்னருக்கும், ஆங்கிலேய அரசுக்கும் எதிராக நிலப்போராட்டம் நடத்தி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிலம்பெற்றுத் தந்த வரலாற்றைச் செங்கொடி இயக்கம்கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ராஜஸ்தானின் நோகா நகராட்சித் தேர்தலில்பாஜகவை 32-13 வித்தியாசத்தில் தோற்கடித்ததாக வும், மகாராஷ்டிரத்தில் விவசாயப் போராட்டத்தால் ரூ.36,000 கோடி கடன் தள்ளுபடி பெறப்பட்டதாகவும் விஜு கிருஷ்ணன் தெரிவித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கம் 27 மாநிலங்களில் ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய விவசாயிகள் அமைப்பு எனக் குறிப்பிட்ட அவர், அமைப்பை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அமைப்பின் 36-ஆவது அகில இந்திய மாநாடு தெலங்கானாவில் நவம்பர் 15 அன்று துவங்குகிறது எனவும் அவர் அறிவித்தார்.

‘வேலையின்றி மக்கள் வெளியேறும் அவலம்’ — ஹன்னன் முல்லா

கிராமங்களில் வேலை இல்லாததால் மக்கள் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி அலைந்து குடியேறும்அவல நிலை ஏற்பட்டுள்ள தாக அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர்ஹன்னன் முல்லா தெரிவித்தார். உரம், பூச்சிக்கொல்லி, மின்சார விலை உயர்ந்து, விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்தினால் ஓரளவு பாதுகாக்க முடியும் எனவும் கூறினார். ராமரின் பெயரில்கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தால் சில மாதங்

களில் மட்டும் 9 கோடி வேலை நாட்கள் குறைந்துள்ளதாகவும், மோடி அரசு அதானி-அம்பானியின் முகவராகச் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டிய அவர், கார்ப்பரேட் ஆதரவு அரசை அகற்றத் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

‘86 சதவீத விவசாயிகள் கடனாளிகள்’ — டி. ரவீந்திரன்

விவசாயிகள் நட்டமடைந்து 86 சதவீதம் பேர் கடனாளிகளாக மாறியுள்ளதாகவும், 12 ஆண்டு பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் 5 லட்சத்தக்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், தினக்கூலிகள் தற்கொலை செய்துள்ளதாகவும் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் தெரிவித்தார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்திற்கு ரேஷனில் மாதம் 35 கிலோ அரிசி என்பதை நபர் ஒன்றுக்கு 7 கிலோ என மாற்றி உணவுப் பாதுகாப்பு முறை சீரழிக்கப்படுவதாகக் கூறிய அவர், சிறு-குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடியும் வழங்குமாறு விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் துணை நிற்பதாகத் தெரிவித்தார்.

‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் முக்கியமானது’ : பெ. சண்முகம்

இப்பொதுக் கூட்டத்தில் பேசுகையில், தவெக அரசின் நடவடிக்கைகளில் மக்கள் நலன் சார்ந்தவற்றுக்கு ஆதரவும், அல்லாதவற்றுக்கு எதிர்ப்பும் என்ற அடிப்படையில் விவசாயிகள் சங்கம் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கு தொடர்பான தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்க முடியாது என்ற அரசாணையை எதிர்ப்புக்குப் பின் அரசு திரும்பப் பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டுப் பின்னர் திரும்பப் பெறப்படுவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். அதை வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது முதலமைச்சர்-அமைச்சர்களின் ஒப்புதலுடனா அல்லது அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கையா என அரசு விளக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தகவல் அறியும் உரிமைச் சட்டம், 100 நாள் வேலைத் திட்டம், வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் வலுவான பங்களிப்பால் உருவானவை என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சட்டம்-ஒழுங்கு என்ற காரணத்தை முன்வைத்துத் தகவல்களை மறுப்பதற்கும், போராட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதற்கும் வழிவகுக்கும் நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் என்றும் சண்முகம் எச்சரித்தார். புதிய விபி ஜி ராம் ஜி திட்டத்தில் 125 நாள் வேலை அறிவிக்கப்பட்டாலும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே 100 நாள் திட்டத்தில் 4 முதல் 8 வாரங்கள் கூலி நிலுவையில் இருப்பதாகவும், அன்றாடக் கூலியை நம்பி வாழும் மக்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். வன உரிமைச் சட்டம் 2006-ஐ முழுமையாக அமல்படுத்தி மேகமலை மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் எனவும், வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்காமல் மக்களை வெளியேற்றத் துணை ராணுவத்தை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிடுவதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையப் பரிந்துரைப்படி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்ஐஆர் நடவடிக்கைகளுக்கு அரசு விளக்கம் அளித்து, நீக்கப்பட்ட வாக்காளர்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.