மோடி அரசின் கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் விஜு கிருஷ்ணன் அறைகூவல்
23 Sept 2026, 8:25 pm

மோடி அரசின் கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம்

விஜு கிருஷ்ணன் அறைகூவல்

புதுச்சேரி,செப்.23-மோடி அரசின் கார்ப்பரேட் மய கொள்கையை எதிர்த்து தில்லியில் நடைபெற உள்ள போராட்ட த்திற்கு விவசாயிகள் தயா ராகவேண்டும் என விஜு கிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்.அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் புதுச்சேரி 15ஆவது மாநில மாநாடு பாகூரில் செவ்வாயன்று(செப்.22)நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கொடியை ஸ்தாபக தலை வர்களில்ஒருவரான பி. கலியபெருமாள் ஏற்றினார்.

முன்னதாக நடைபெற்ற மாநாட்டு பேரணியை தொழிற்சங்க தலைவர் தா.முருகன் துவக்கி வைத்தார்.

சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாநாட்டை துவக்கி வைத்துப் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் துவக்கி வைத்ததாராளமயக் கொள்கையின் விளைவாக இன்றைக்கு நாடு முழுவதும் விவசாயிகள் சொல்ல வொணாதுயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். தாங்கள் விளைவிக்கின்ற விவசாய பொருட்களுக்கு உரிய விலைகிடைப்பதில்லை. அதனால் நாடு முழுவதும் விவசாயிகளும், தொழி லாளர்களும்கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர். அந்த விவசாய விரோத கொள்கையை காங்கிரஸ் அரசை விட இன்னும் மோசமாக பாஜகவை சேர்ந்த மோடி அரசு பின்பற்றி வருகிறது. ஒருபடி மேலே சென்று கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான விவசாய கொள்கை யை மோடி அரசு அமல்படுத்தி வருகிறது.

இடது முன்னணி அரசு

நெல் குவின்டால் ஒன்றுக்கு ஆதார விலை ரூ. 2300 என்று ஒன்றிய அரசு நிர்ணயித்தாலும், புதுச்சேரி, தமிழகத்தில் ரூ.1600 மட்டுமே வழங்கப் படுகிறது. ஆனால் கேரளத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த இடது முன்னணி அரசு விவசாயிகளையும், தொழிலாளர்களையும் பாதுகாத்த அரசாக திகழ்ந்தது. நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ. 3,000 வரை இடது முன்னணி அரசு வழங்கியது.

64 லட்சம் தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்கியது. 5 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்தது. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவ மனையின் தரத்தை இடது முன்னணி அரசு உயர்த்தியது. இத்தகைய தொழிலாளர்களின் உரி மைகளை நிலை நாட்டிய அரசை பிற்போக்கு வாதிகள் வீழ்த்தியுள்ளனர்.

காங்கிரஸ் பின்பற்றிய அதே பொருளாதாரக் கொள்கையை அப்படியே பின்பற்றி வரும் பாஜக மோடி அரசின் கார்ப்பரேட் மய கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் விவசாயிகள், தொழிலாளர்களும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றோம். எதிர்வரும் நவம்பர் 26 ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்த விவசாயிகளும், தொழிலாளர்களும் தயாராகி வரு கிறோம். டிசம்பர் 1 அன்று சிஐடியு சார்பில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் புதுச்சேரியில் இருந்து விவசாயிகளும், தொழி லாளர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்று துணைத் தலைவர் பத்ம நாபன் பேசினார். மாநாட்டு வேலை அறிக்கை மாநிலச் செயலாளர் வே. சங்கர் வாசித்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் மு.சதாசிவம் தாக்கல் செய்தார். மாநாட்டில் அகில இந்திய துணைச் செயலாளர் வல்சன் பனோலி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் சுதா சுந்தரராமன், சிஐடியு புதுச்சேரி மாநில செயலாளர் சீனுவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் தமிழ்ச்செல்வன், மாஹே பகுதி செயலாளர் விஜீஷ், பகுதி செயலாளர்கள் தமீம், முருகையன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இறுதியாக சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் டி. ரவீந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவராக ஆர்.ராஜாங்கம், செயலாளராகஇரகு.அன்புமணி, பொரு ளாளராக எஸ்.ராமமூர்த்தி, உட்பட 23 பேர் கொண்ட மாநில குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.