பெங்களூருவில் விஜு கிருஷ்ணன் பங்கேற்பு
19 Jul 2026, 9:20 pm
<p><strong>பெங்களூருவில் விஜு கிருஷ்ணன் பங்கேற்பு</strong> </p><p>கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஎம்எஸ் பவன் முன்பு, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சிபிஎம் கர்நாடக மாநிலக் குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பிரகாஷ் ஆகியோர் உரையாற்றினர். சோனம் வாங் சுக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ; நீட் தேர்வு முறை கேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.</p>
