கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை, சிபிஎம் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
28 May 2026, 11:52 pm

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை, சிபிஎம் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 28- கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் இல்லம், அவரது மகனின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் பழிவாங்கும் நோக்கத்தோடு ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்தும், இதற்கு எதிராக தில்லியில் ஜனநாயக முறையில் போராடிய கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட தலைவர்களை தில்லி காவல்துறை அராஜகமான முறையில் கைது செய்ததைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக் குழுக்கள் சார்பில் வியாழனன்று தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர்கள் கோவி.

வெற்றிச்செல்வம், சிவராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் ஆகியோர் பேசினர்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் தஞ்சை ரயிலடியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநகரச் செயலாளர் எம். வடிவேலன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் பி. செந்தில்குமார், ஆர். கலைச்செல்வி, என். சரவணன், எஸ். செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் இ. வசந்தி, தஞ்சை ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், மாநகரக் குழு உறுப்பினர்கள் சி.ராஜன், தர்மா, கே.அன்பு மற்றும் தோழர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே பேரணியாகச் சென்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சு. மதியழகன், எஸ். ஜனார்த்தனன், கி. ஜெயபாலன் மற்றும் இடைக்கமிட்டி செயலாளர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்., மயிலாடுதுறை மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் தலைமை தபால் நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்திலிருந்து நீதிமன்ற சாலை, கச்சேரி சாலை வழியாக செங்கொடிகளை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கிட்டப்பா அங்காடி முன்பு பிரதமர் மோடியின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி, தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி. சிங்காரவேலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின்,எஸ்.துரைராஜ், ப. மாரியப்பன், டி. சிம்சன், ஏ. ரவிச்சந்திரன், ஜி. வெண்ணிலா, சி. விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ்,டி.ஜி.ரவி, அமுல் காஸ்ட்ரோ மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருவாரூர் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் தலைமை யில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கண்டன உரையாற்றினார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர், கே.என். முருகானந்தம், கே.பி. ஜோதிபாசு, கே.ஜி. ரகுராமன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அமைப்பினர் கண்டன கோஷம் எழுப்பினர்.

எதிர்க் கட்சித் தலைவர்களை ஒடுக்கும் இழிசெயலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அசோக் தாவ்லே, விஜூ கிருஷ்ணன், மரியம் தாவ்லே உட்பட அகில இந்திய தலைவர்கள் பலரும் தில்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதை ஒட்டி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர செயலாளர் டி.ஜி. சேகர், ஒன்றியச் செயலாளர் டி. லெனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல், வலங்கைமானில் ஒன்றியச் செயலாளர் எஸ். இளங்கோவன் தலைமையிலும், திருத்துறைப்பூண்டியில் ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ் தலை மையிலும், மன்னார்குடி ஒன்றியத்தில் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால் ஆகியோர் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மேலும். முத்துப்பேட்டை, கோட்டூர் நீடாமங்கலம் மற்றும் நன்னிலம் ஒன்றிய தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் தஞ்சை மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடை மருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில், திருச்சேறை கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினர் எஸ் பழனிவேல் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை விளக்கி தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜெயபால் உரையாற்றினார்.

ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ. வெங்கடேசன், கிளைச் செயலாளர் டி.என். ஆறுமுகம் உள்ளிட்ட சிபிஎம் கட்சியினர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில், கேராளா முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனையை கண்டித்தும், தில்லியில் அமலாக்கத் துறையை கண்டித்து போராடிய தலைவர்களை கைது செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர குழுவின் சார்பில், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் கே. கோபு தலைமையில், ஒன்றியச் செயலாளர்கள் டி.வி காரல் மார்க்ஸ், எம். முருகதாஸ் முன்னிலையில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். சாமிநாதன் ஆறு. பிரகாஷ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கு. கலைச்செல்வி, நகர்மன்ற துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ், நகரக் குழு உறுப்பினர்கள் கோதாவரி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். அகஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பெ.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எட்வின், கருணாநிதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.