விஜய்யின் வருகை: தவெக நிர்வாகிகள், பிஏபி பாசன விவசாயிகள் ஏமாற்றம்
2 Oct 2026, 1:13 am
<p><strong>விஜய்யின் வருகை: தவெக நிர்வாகிகள், பிஏபி பாசன விவசாயிகள் ஏமாற்றம்</strong></p><p>தாராபுரம், அக். 1 –தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து மாருதி நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க,கட்சித் தலைவர் சி.ஜோசப் விஜய் சென்னையிலிருந்து கோவை வழியாகச் சாலை மார்க்கமாக தாராபுரம் வந்தார்.</p><p>அவர் குண்டடம் பகுதி வழியாக சென்றபோது, வரவேற்பு அளிப்பதற்காக தவெக குண்டடம் தெற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளும், பிஏபி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகளும் பூங்கொத்துமற்றும் சால்வைகளுடன் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்தனர்.ஆனால், விஜய் வாகனத்தை நிறுத்தாமல் உள்ளிருந்தபடியே கையசைத்தவாறு வேகமாக கடந்து சென்றார். இதனால், அவருக்கு நேரில் மாலை அணிவித்து, சால்வை வழங்கி வரவேற்க நீண்ட நேரமாக காத்திருந்த கட்சி நிர்வாகிகளும், பாசன விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் ஏமாற்றமும் எரிச்சலுமடைந்தனர்.</p>
