தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் ‘அழைப்பு விடுக்காத’ ஆளுநர் அர்லேகர்!

6 May 2026, 10:48 pm
ஆட்சியமைக்க  உரிமை கோரிய விஜய் ‘அழைப்பு விடுக்காத’ ஆளுநர் அர்லேகர்!

ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் ‘அழைப்பு விடுக்காத’ ஆளுநர் அர்லேகர்!

சென்னை, மே 6 - தமிழக சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களு டன் தனிப்பெருங் கட்சி யாக தவெக உருவெடுத் துள்ள நிலையில், அக்கட்சி யின் தலைவர் விஜய், கிண்டி மக்கள் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந் திர விஸ்வநாத் அர்லே கரை நேரில் சந்தித்து ஆட்சி யமைக்க உரிமை கோரினார்.

தவெக, காங்கிரஸ் கட்சிகள் சார்பில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவுக் கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.

இந்த சந்திப்பில், அந்தக் கட்சியின் மூத்த தலை வர்கள் செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

எனினும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான 118 என்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆத ரவை விஜய் நிரூபிக்காத நிலையில், அவருக்கு ஆளுநர் அர்லேகர், இன்னும் அழைப்பு விடுக்க வில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் வியாழக்கிழமை மே 7 அன்று திட்ட மிட்டபடி நேரு உள்விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுமா என்ற குழப்பம் நீடித்து வரு கிறது.

ஆனால், இன்று காலை 11.30 மணிக்கு விஜய் முதல்வராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் நடை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

பதவியேற்பு குறித்து, தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் விஜய் யைச் சந்தித்து விவாதித்ததாகவும் கூறப்படு கிறது.

இந்த விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயின் பாதுகாப்பிற்காக புதிதாக டி.ஐ.ஜி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் உத்தரவு

இதனிடையே, 16-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கலைப்பு மே 5 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.