தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

1 Jun 2026, 8:52 pm
திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

சென்னை, ஜூன் 1 - தன்னை சட்டமன்ற உறுப்பின ராக தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நன்றி தெரிவித்தார்.

புனித ஜோசப் கல்லூரி மை தானத்தில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத் தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு தனது உரையை தொடங்கிய முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரி வித்தார்.

“தமிழ்நாட்டுக்கு திருச்சி எப்படி இதயம் போன்றதோ, அதேபோல் எனக்கு திருச்சி கிழக்கு தொகுதி இதயத்திற்கு நெருக்கமானது” என்று குறிப்பிட்டார்.

6 மாதம் அமைதியாக இருப்போம் என்று கூறியவர்கள் தவெக ஆட்சி அமைந்த 6 நாட்களில் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டதாக கூறிய அவர், தவெக அரசை எவ்வளவு தான் விமர்சித்தாலும், மக்கள் எப்போதும் தவெகவையே ஆதரிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக அரசியலில் இப்போதும் இரண்டே சக்திகள்தான் உள்ளன என்று கூறிய முதலமைச்சர் விஜய், “திமுக தீய சக்தி மட்டுமல்ல, தூர சக்தியாக வும் மாறிவிட்டது.

அதிமுக தீர்ந்து போன சக்தியாக மாறிவிட்டது” என்றார்.

தவெக-வை மக்கள் இன்னும் அதிக மாக ஆதரித்திருந்தால் தனி மெஜா ரிட்டியோடு வெற்றி பெற்றிருக்கலாம் என்று குறிப்பிட்டார். தவெக குதிரை பேரம் செய்வதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டை மறுத்த முதலமைச்சர் விஜய், எங்களுக்கு எந்த குதிரை பேரமும் செய்ய வேண்டிய தேவை இல்லை.

சாதி, மத பேதம் பாராமல் தமிழக மக்கள் வாக்களித்து பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றார். திருச்சி கிழக்கு தொகுதியை தனது செல்லக்குழந்தை என்று வர்ணித்த முதலமைச்சர், விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பிறகு முதலமைச்சர் விஜய் இரவே தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்பினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.