தவெக அரசு பதவியேற்றது தமிழகத்தின் 14-ஆவது முதலமைச்சரானார் சி.ஜோசப் விஜய் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் முதல் கையெழுத்து
10 May 2026, 8:33 pm

தவெக அரசு பதவியேற்றது தமிழகத்தின் 14-ஆவது முதலமைச்சரானார் சி.ஜோசப் விஜய் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் முதல் கையெழுத்து

சென்னை, மே 10 - தமிழக வெற்றிக் கழகத்தின் தலை வர் சி. ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் 14-ஆவது முதலமைச்சராக ஞாயிற்று க்கிழமை (மே 10) காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப் பிர மாணமும் ரகசியக் காப்புப் பிரமாண மும் செய்து வைத்தார். “சி. ஜோசப் விஜய் எனும் நான்...” என்று தொடங்கி “ஆண்டவன்” மீது உறுதிமொழி எடுத்து அவர் பதவியேற்றார்.

கூட்டணி ஆதரவுடன் அமைந்த தவெக அரசு

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விடக் குறைவாக இருந்த நிலையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 120 உறுப்பினர் களின் பலத்துடன் விஜய் ஆட்சி யமைத்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 164-ஆவது பிரிவின் கீழ் ஆட்சியமைக்க அழைப்பு கோரிய விஜய்க்கு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க மே 13-ஆம் தேதி வரை ஆளுநர் அவகாசம் வழங்கியுள்ளார்.

முதற்கட்டமாக அமைச்சரவை பதவியேற்பு

முதலமைச்சருடன் சேர்த்து தவெக-வைச் சேர்ந்த ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் அக்கட்சியின் பொதுச்செய லாளர் என். ஆனந்த் நியமிக்கப்பட்டுள் ளார். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய பொறுப்பாளராகவும், விஜய்யின் நம்பிக்கைக்குரிய நிழலாக வும் செயல்பட்டு வருபவர். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான கே.ஏ. செங்கோட்டையன், 10-ஆவது முறை யாகச் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

மேலும், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று வருமான வரித்துறை அதிகாரியாகப் பணியாற்றிய மருத்து வர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், விஜய்யின் நிதி விவகாரங்களைக் கவனித்து வரும் தணிக்கையாளர் பி.வெங்கட்ரமணன், தகவல் தொழில்நுட்பத் துறையில் அனுபவம் கொண்ட ஆர்.நிர்மல்குமார், ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ நிறுவனத்தின் ஆதவ் அர்ஜூனா, பிரபல பேச்சாளர் ஆர். ராஜ்மோகன், காரைக்குடி பல் மருத்து வர் டாக்டர் டி.கே. பிரபு மற்றும் புள்ளி விவரப் பட்டதாரி எஸ். கீர்த்தனா ஆகி யோர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

நடைமுறை மாற்றம் குறித்த சர்ச்சை

தமிழக அரசு விழாக்களில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தேசிய கீதத்து டன் முடிவடைவதே மரபாக இருந்து வந்தது. ஆனால், இந்த விழாவில் அந்த நடைமுறை மாற்றப்பட்டு, முத லில் ‘வந்தே மாதரம்’, இரண்டாவதாக ‘தேசிய கீதம்’, மூன்றாவதாக மட்டுமே ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ என்ற வரிசை யில் பாடல்கள் இசைக்கப்பட்டன. ஒன்றிய அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்கச் செய்யப்பட்ட இந்த மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் கையெழுத்து மற்றும் கன்னிப் பேச்சு

பதவியேற்ற உடனேயே விழா மேடையிலேயே முதலமைச்சர் விஜய் மூன்று முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலாவதாக, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் அனைத்து வீடு களுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், இரண்டா வதாகப் பெண்களின் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’ உருவாக்கம் மற்றும் மூன்றாவதாக மாநிலம் தழுவிய ‘போதைப் பொருள் தடுப்பு அலகு’ அமைத்தல் ஆகிய வற்றுக்கான அரசாணைகளில் அவர் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய விஜய், “வறுமையும் பசியும் தனக்கும் தெரியும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். முந்தைய அரசின் 10 லட்சம் கோடி கடன் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் என்றும், மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன் என்றும் உறுதி யளித்தார். “இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்ய விடவும் மாட்டான்” என்று அவர் சூளுரைத்தார்

கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி

தனது உரையின் நிறைவாக, தனக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு முத லமைச்சர் விஜய் நெஞ்சார்ந்த நன்றி யைத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரவீன் சக்கரவர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன், மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார், வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் து. ராஜா, மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு தனது நன்றியைப் பதிவு செய்தார்.

வாழ்த்துகள்

இவ்விழாவில் ராகுல் காந்தி விஜய்க்கு அருகே விழா மேடையில் அமர்ந்திருந்தார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்டோர் முதல் வரிசையில் பங்கேற்றனர். பதவியேற்ற விஜய்க்குப் பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று சட்டமன்றம் கூடுகிறது

நிர்வாக வசதிக்காக முதலமைச்ச ரின் முதன்மைச் செயலாளராகச் செந்தில் குமாரும், தனிச் செயலாளராக லட்சுமி பிரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மே 11 அன்று தற்காலிகச் சபாநாயகர் கருப் பையா தலைமையில் சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் விடுத்துள்ள வாழ்த்திச் செய்தி வருமாறு:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவுடன் முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து : நடைமுறையை மாற்றாதீர்!

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசியகீதமும் பாடுவதுதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டதும், பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ள முடியாமலும் இருந்தது. மேலும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது ஏற்புடையதல்ல. ஆகவே, அரசு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தமிழ்நாடு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என அறிவித்திருப்பதும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடரும் என்று அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம்.