120 உறுப்பினர்கள் ஆதரவுடன் பெரும்பான்மை கிடைத்தது முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார்!
9 May 2026, 10:39 pm

120 உறுப்பினர்கள் ஆதரவுடன் பெரும்பான்மை கிடைத்தது முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார்!

சென்னை, மே 9 - தவெக தலைவர் சி.ஜோசப் விஜய், ஞாயிறன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்ச ராக பதவியேற்றுக் கொள்கிறார். சென்னை நேரு விளையாட்ட ரங்கில் நடைபெறும் விழாவில், தவெக தலைவர் விஜய்க்கு, ஆளு நர் அர்லேகர், முதலமைச்சராக பத விப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

விஜய்-யுடன் சேர்த்து முதற்கட்ட மாக 10 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது.

இந்த விழாவில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக தலைவர்கள் கலந்து கொள்கின்ற னர்.

இடதுசாரிகள் - விசிக ஆதரவு

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், விஜய் ஆட்சி அமைப்பதற்கு சிபிஎம், சிபிஐ, விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சி கள் வெளியில் இருந்து ஆதரவு தெரி வித்தன. காங்கிரஸ் கட்சி ஆட்சி யில் பங்கு என்ற அடிப்படையில் தனது ஐந்து உறுப்பினர்களின் ஆத ரவை வழங்கியது.

நேரம் ஒதுக்காத ஆளுநர்

டிதங்களுடன் நான்காவது முறை யாக ஆளுநரை சந்திக்க மாலை 4.30 மணிக்கு கிண்டி மக்கள் மாளி கையை நோக்கி புறப்பட்ட விஜய், ஆளுநர் நேரம் ஒதுக்காத தால், மீண்டும் பட்டினப்பாக்கம் அலு வலகம் திரும்ப வேண்டியதானது. தொடர்ந்து ஆளுநர் அர்லேகர், கேர ளம் செல்கிறார் என்ற தகவலும் வெளியான நிலையில், விஜய்யுடன் சென்ற சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சி களின் தலைவர்கள் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடு படத் தயாரானதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உளவுத்துறை வழி யாக ஆளுநருக்கு எட்டியதும், அவர் தனது கேரளப் பயணத்தை ரத்து செய்து மாலை 6.30 மணிக்கு,விஜய்யை சந்திக்க நேரம் வழங்கினார்.

ஆளுநருடன் சந்திப்பு

ஆளுநரை சந்திப்பதற்கு நேரம் கிடைத்த தும் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளுடன் சிபிஎம், சிபிஐ, விசிக கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இணைந்து ஆளுநரைச் சந்தித்த னர். அப்போது, தவெக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்தை அளித்து, ஆட்சியமைக்க அழைக்கு மாறு கோரிக்கை விடுத்தனர்.

கே.பாலகிருஷ்ணன் - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண் முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்க டேசன் எம்.பி. மற்றும் சட்டமன்றக் குழு தலை வர் ஆர். செல்லசுவாமி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, விசிக சட்டமன்றக்குழுத் தலைவர் வன்னியரசு, ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்களும் சந்திப்பில் பங்கேற்றனர்.

ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு

இதையடுத்து, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அளித்த ஆதரவை ஏற்று, தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்யை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நிய மித்து உத்தரவிட்ட ஆளுநர் அர்லேகர், விஜய்யை முதல்வராக பதவியேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதன்படி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதல மைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

முதலமைச்சராக பதவியேற்கும் விஜய், சட்டமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான் மையை மே 13-ஆம் தேதிக்குள் நிரூபிக்குமா றும் ஆளுநர் தமது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

விஜய் முதலமைச்சராக பதவியேற்க உள்ள தையடுத்து, தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத் தில் ஈடுபட்டனர்.