தீக்கதிர் முக்கிய செய்திகள்
7 Apr 2026, 5:38 pm

மதுரை மத்தி மக்கள் சென்னைக்கு டிக்கெட் தருவார்கள்!

“சுந்தர் சி பற்றித் தவ றாகப் பேச ஒரு துளியும் இடமில்லை” என அவர் மனைவி குஷ்பு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். ஆனால், மதுரை மக்களின் கேள்விகள் வேறாக உள்ளன. மதுரைக்கு மெட்ரோ கிடை யாது என ஒன்றிய அரசு சொன்னபோது சுந்தர் சி எங்கே போனார்? இஸ்லாமியர் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரான சங் பரிவாரத் தாக்குதல்களை இவர் கண்டிப் பாரா? மதுரை மண்ணுக்கும் இவருக்கும் துளியும் தொடர்பு இல்லாத நிலையில், இவரைத் தேர்ந்தெடுத்து மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தேர்தல் முடிவுக்குப் பிறகு சுந்தர் சி-யை மதுரை மக்கள் மீண்டும் சென்னைக்கே ரயிலேற்றி விடுவது உறுதி!

விஜய்யின் ‘லீவு’ அரசியல்!

தேர்தல் பரப்புரைக்கு நடுவே த.வெ.க தலைவர் விஜய் அடிக்கடி ‘விடுமுறை’ எடுப்பது அரசியல் வட்டாரத்தில் கிண்டலாகப் பேசப்படுகிறது. இதற்குக் காரணம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என ஒரு தரப்பு கூறினாலும், உண்மை வேறாக இருக்கிறது. “படுத்துக் கொண்டே ஜெயிப்போம்” என்று சொன்ன பழைய காலத்து அரசியல்வாதிகள் போல, நேரடிப் பிரச்சாரம் செய்யாமலேயே வெற்றி கிடைத்துவிடும் என விஜய்யும் அவரது கட்சியினரும் கனவு காண்கிறார்கள். தேர்தல் ஆணையம் விதிக்கும் வரைமுறைகளை மறைத்து, அதிகாரிகள் மீது பழி போடுவதால் ஓட்டுகள் விழாது ‘தளபதி’ அவர்களே!

எடப்பாடி ‘ரோஷம்’ பற்றி பேசலாமா ?

“மனுஷனாகப் பிறந்தால் ரோஷமுடன் இருக்க வேண்டும், பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்பவர்கள் உண்டு” என ஓபிஎஸ்-ஸை சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்தப் பேச்சு அப்படியே எடப்பாடிக்கே பொருந்துவதுதான் ஆகச்சிறந்த நகைச்சுவை. சசிகலா முதல் ஓபிஎஸ் வரை தனக்கு உதவியவர்கள் அனைவருக்கும் துரோகம் இழைத்த வரலாறு கொண்ட எடப்பாடி, ‘ரோஷம்’ பற்றிப் பேசுவது வேடிக்கை. இது ஓபிஎஸ்-ஸுக்கான விமர்சனமா அல்லது எடப்பாடியின் ‘சுய ஒப்புதல்’ வாக்குமூலமா என்று மக்கள் சிரிக்கிறார்கள்!

சாத்தான்குளம் தீர்ப்பும்... அதிமுகவின் மௌனமும்!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவல்துறையினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அன்று ஆட்சியில் இருந்த அதிமுக, இந்தக் கொடூரத்தை மூடி மறைக்கப் பார்த்த விதம் இப்போது அம்பலமாகியுள்ளது. “மூச்சுத்திணறலால் இறந்தார்கள்” என எடப்பாடி பழனிசாமியும், “இது லாக்-அப் மரணமே இல்லை” எனக் கடம்பூர் ராஜுவும் அன்று வக்காலத்து வாங்கினார்கள். இப்போது நீதிமன்றத் தீர்ப்பு கொடூரத்தை உறுதி செய்துள்ள நிலையில், பொய்ச் சான்று சொன்ன அதிமுக தலைவர்கள் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார்களா? அதிகார மிரட்டலால் உண்மையை மறைக்க முடியாது என்பதற்கு இந்தத் தீர்ப்பே சாட்சி!

கல் எறியும் முன் குடும்ப ஜாதகத்தைப் பாருங்க! “திமுக என்றாலே வாரிசு அரசியல்தான்” என்று பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் திருவாய் மலர்ந்திருக்கிறார். ஆனால், அவர் பின்னணியைப் பார்த்தால் ‘வாரிசு’ என்ற சொல்லுக்கே அவர்தான் அகராதி போலத் தெரிகிறது. பியூஷ் கோயலின் தந்தை வேத் பிரகாஷ் கோயல் 3 முறை எம்.பி-யாகவும் அமைச்சராகவும் இருந்தவர்; தாய் சந்திரகாந்தா கோயல் 3 முறை எம்.எல்.ஏ. இது வாரிசு அரசியல் இல்லையா? இதுமட்டுமல்ல, சிந்தியா குடும்பம் முதல் ராம் மோகன் நாயுடு வரை பாஜகவில் வாரிசு அரசியல் தலைவிரித்தாடுகிறது. அடுத்தவர் வீட்டு வாரிசை விரல் நீட்டும் முன், பாஜக தன் கண்ணாடி கூண்டைத் துடைத்துப் பார்ப்பது நல்லது!