தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நூறு கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்திற்கான போராட்டம் - பேராசிரியர் விஜய் பிரசாத்

10 May 2026, 11:16 pm
நூறு கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள்  கண்ணியத்திற்கான போராட்டம் - பேராசிரியர் விஜய் பிரசாத்

நூறு கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்திற்கான போராட்டம் - பேராசிரியர் விஜய் பிரசாத்

சில வாரங்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் பான்டுங் நகரில் நான் இருந்த போது, சக்கர நாற்காலியைப் பயன் படுத்தும் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் ஒரு புள்ளி விவரத்தைப் பகிர்ந்துகொண்டார்: ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு (WHO) கணக்கீட்டின்படி, உல கம் முழுவதும் 1.3 பில்லியன் மக்கள் மாற்றுத்திறனாளி களாக வாழ்கின்றனர். அதாவது, மனிதகுலத்தில் ஆறில் ஒருவர் ஏதோ ஒரு வகை மாற்றுத்திறனுடன் வாழ்கிறார். இவர்கள் ஒரு சிறுபான்மையினரோ அல்லது விதி விலக்கோ அல்ல; இவர்கள் மனித அனுபவத்தின் ஒரு மாபெரும் அங்கம். இருப்பினும், வரலாற்றின் விளிம்பு களில் இருப்பவர்களாகவே இவர்கள் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையில், இவர்கள் வரலாற்றின் மையப்புள்ளியில் நிற்கிறார்கள்.

ஊனம்: ஒரு உயிரியல் நிலை மட்டுமல்ல

ஊனம் என்பது வெறும் உயிரியல் குறைபாடு மட்டுமல்ல; அது ஒரு குறைபாட்டிற்கும் அதைச் சுற்றியுள்ள உலகிற்கும் இடையிலான தொடர்பால் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு சக்கர நாற்காலி முன்னேற விடாமல் தடுக்கும் சிதைந்த சாலைகள், சிகிச்சை அளிக்கும் முன் பணம் கேட்கும் மருத்துவமனைகள், மாறுபட்ட கற்றல் திறன் கொண்ட குழந்தையைப் புறக் கணிக்கும் வகுப்பறைகள், உடல்களைச் சிதைக்கும் போர்கள் மற்றும் ‘உற்பத்தித் திறன்’ அற்றவர்கள் என முத்திரை குத்தி ஒருவரை கைவிடும் முதலாளித்துவப் பொருளாதாரம் - இவையே ஒருவரை ‘ஊனமுற்றவராக’ மாற்றுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், ஊனம் என்பது உடல் குறைபாடு, சமூகத் தடைகள் மற்றும் அநீதி ஆகியவற்றுக்கு இடையே ஏற்படும் ஒரு மோதலாகும்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கை மற்றும் முதலாளித்துவத்தின் தேர்வு

2022-ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ‘மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார சமத்துவம் குறித்த உலகளாவிய அறிக்கை’ (Global Report on Health Equity for Persons with Disabilities) மிகவும் முக்கியமானது. மாற்றுத்திற னாளிகள் எதிர்கொள்வது வெறும் ‘சமத்துவமின்மை’ (inequality) அல்ல, அது தவிர்க்கப்பட வேண்டிய, அநீதியில் வேரூன்றிய ‘சுகாதார அநீதிகள்’ (health inequities) என்று அந்த அறிக்கை வாதிடுகிறது. இவை தவிர்க்கப்படக்கூடியவை என்று அங்கீகரிப்பது என்பது, இவை அரசியல் ரீதியானவை என்பதையும், முத லாளித்துவ அமைப்பிற்குள் எடுக்கப்பட்ட தவறான தேர்வுகளின் விளைவு என்பதையும் ஒப்புக்கொள்வதாகும்.

உலகளாவிய தெற்கு மற்றும் ஊனத்தின் உற்பத்தி

இந்த அறிக்கையில் உள்ள ஒரு அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், மாற்றுத்திறனாளிகளில் 80 சதவீதத்தினர் ‘உலகளாவிய தெற்கு’ (Global South) எனப்படும் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். மோசமான வேலை நிலைமைகள், சுற்றுச்சூழல் சீரழிவு, மாசுபட்ட உணவு மற்றும் நீர், சீரழிந்த சுகாதார அமைப்புகள் மற்றும் போர்கள் ஆகியவை ஊனத்தை உருவாக்கி, அதை மேலும் தீவிரமாக்குகின்றன. 2019-ஆம் ஆண்டின் கணக்கின்படி, போர் மண்டலங்களில் வாழும் ஐந்தில் ஒருவருக்கு மனநல பாதிப்புகள் உள்ளன. போரின் இடிபாடுகளில் ஊனம் என்பது காயம் மூலமாக மட்டுமல்லாமல், அதிர்ச்சி, பசி மற்றும் இடம்பெயர்வு மூலமாகவும் பலமடங்கு பெருகுகிறது. இன்று காசா பகுதி, குழந்தைகளிடையே மிக அதிக எண்ணிக்கையிலான உறுப்பு இழப்புகள் (amputees) கொண்ட பிராந்தியமாக மாறியுள்ளது. உலகளாவிய தெற்கு நாடுகள் ஊனத்தை வெறும் இருப்பிடமாகக் கொண்டிருக்கவில்லை; அங்கிருக்கும் சுரண்டல் அமைப்புகளே ஊனத்தை உற்பத்தி செய்கின்றன.

வறுமை மற்றும் ஊனத்தின் நச்சுச் சுழற்சி

ஊனத்திற்கும் வறுமைக்கும் இடையே ஒரு நச்சுச் சுழற்சி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, அதனால் அவர்கள் வறுமையில் வாட வேண்டியுள்ளது. அவர்களுக்குச் சிகிச்சை மறுக்கப்படு வதுடன், நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம், இதனால் அவர்கள் முன்கூட்டியே இறக்க நேரிடுகிறது. இது விதி அல்ல; இது திட்டமிட்ட வடி வமைப்பு. கோவிட்-19 பெருந்தொற்றின் போது, கற்றல் குறைபாடு கொண்டவர்களிடையே இறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்தது. இது வெறும் மருத்துவ உண்மை மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே, எவ்விதச் செயலிலும் இறங்காத உலக அமைப்பின் மீதான குற்றப்பத்திரிகையாகும்.

அநீதியின் கட்டமைப்பு

சமூகமும் அரசும் உருவாக்கி வைத்துள்ள இந்த விலக்கல் கட்டமைப்பு பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

•சிகிச்சைக்கு பணம் கேட்கும் சுகாதார அமைப்புகள்.

•பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு அணுக முடியாத தகவல் தொடர்புகள்.

•மருத்துவமனைக்குச் செல்வதைத் தடுக்கும் போக்குவரத்துத் தடைகள்.

•பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறை.

•உற்பத்தித் திறனைக் காரணம் காட்டி மனிதர்களைத் தூக்கியெறியும் வேலைவாய்ப்பு முறைகள். முதலாளித்துவ உலகில் இவை அனைத்தும்

இயல்பானவையாக மாற்றப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் விதமான உள்கட்ட மைப்பு என்பது செலவு அதிகம் பிடிக்கும் ஒரு விஷயம் என்ற பொதுப்புத்தி இங்கு வளர்க்கப்பட்டுள்ளது. ஆனால், 2025-ஆம் ஆண்டில் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா வாதிட்டது போல, ஆரம்ப சுகாதாரத் துறையில் முதலீடு செய்வது என்பது சமூகத் தேவை மட்டுமல்ல, அது பொருளாதார ரீதியாகவும் பலன் தரக்கூடியது. ஆரம்பத்திலிருந்தே மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சுகாதார அமைப்புகளைக் கட்டமைப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் மறுமலர்ச்சியை வலுப்படுத்தும். கண்ணியத்திற்கான எட்டு அம்சத் திட்டம் 2006-ஆம் ஆண்டின் ஐநா மாநாடு, மாற்றுத்திற னாளிகளை வெறும் ‘பராமரிப்புப் பொருட்களாக’ பார்ப்ப திலிருந்து, அவர்களை ‘உரிமை கொண்ட குடிமக்களாக’ அங்கீகரிக்கும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதையட்டி, மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தைப் பாதுகாக்க எட்டு அம்சத் திட்டத்தை முன்வைக்கிறோம்:

1. தலைமைத்துவம்: கொள்கை முடிவெடுப்பதில் மாற்றுத்திறனாளிகள் மையமாக இருக்க வேண்டும். “எங்களைப் பற்றி எங்களிடம் கேட்காமல் எதுவும் செய்யாதீர்கள்” என்பதே இதன் தாரக மந்திரம்.

2. அணுகக்கூடிய தகவல்: பொதுத் தகவல்கள் பிரெய்லி, சைகை மொழி மற்றும் டிஜிட்டல் முறைகளில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

3. பொறுப்புக்கூறல்: மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தரவுகளைச் சேகரித்து, பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்களை அரசு உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

4. அனைவருக்குமான வடிவமைப்பு: போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் டிஜிட்டல் அமைப்புகள் ஆரம்பத்தி லிருந்தே அனைவருக்கும் அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

5. அனைவருக்குமான சுகாதாரம்: நிதித் தடைகள் இன்றி தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வசதிகள் கிடைக்க வேண்டும்.

6. உள்ளடக்கிய கல்வி: மாற்றுத்திறனாளி குழந்தை களுக்குப் பொதுக் கல்வி முறையில் தரமான கல்வி உறுதி செய்யப்பட வேண்டும்.

7. சமூக அடிப்படையிலான பராமரிப்பு: உள்ளூர் அளவி லான பராமரிப்பு வலைப்பின்னல்கள் உருவாக்கப் பட வேண்டும்.

8. பொருளாதார நீதி: வருமான ஆதரவு, வேலைவாய்ப்பு உரிமைகள் மற்றும் ஊனம் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளைக் கருத்தில் கொண்ட தொழிலாளர் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

வியட்நாமின் பாடம் மற்றும் வட்ட வடிவ கால்தடங்கள்

வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தின் போது, கிராமங்களுக்கு இடையே செய்திகளைக் கொண்டு செல்லும் பணியில் ‘அன் தியக்’ (செவித்திறனற்ற சகோதரர்) மற்றும் ‘சி மு’ (பார்வையற்ற சகோதரி) ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். தேசிய விடுதலை இயக்கங்களில் மாற்றுத்திறனாளி தோழர்களின் பங்களிப்பை ஆவணப்படுத்துவதில் நாம் தவறி விட்டோம். ஆனால் வியட்நாமில், போரில் காயமடைந்த வீரர்களை ‘துவாங் பின்’ (Thuvang binh) என்று அழைக்கிறார்கள். அவர்களுக்கு ‘நன்றி மற்றும் கைம்மாறு’ கொள்கையின் கீழ் (policy of gratitude and reciprocity) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27 அன்று மரியாதை செலுத்தப்படுகிறது.

1981-ஆம் ஆண்டு, வியட்நாம் கவிஞர் திரான் தியன் (Trran Tiyan) கடற்கரையில் ஒரு ஊன்றுகோல் ஏற்படுத்திய வட்ட வடிவ அடையாளங்களைப் பார்த்தார். அது காலில் காயமடைந்த ஒரு முன்னாள் ராணுவ வீரர், பள்ளிக்குச் சென்று குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கச் சென்றபோது ஏற்பட்ட அடையாளம். அதிலிருந்து அவர் ‘மணலில் வட்ட வடிவ கால்தடங்கள்’ (Round Foot prints on the Sand) என்ற புகழ்பெற்ற பாடலை எழுதினார்:

“மணல் பாதையில் இன்றும் அந்த வட்ட வடிவக் கால்தடங்கள் அலைகின்றன, காயமடைந்த அந்த வீரன் இன்றும் கிராமப் பள்ளிக்குச் செல்கிறான். கையில் கிதாருடன், குழந்தைகளுக்குத் தாயகத்தின் பாடல்களைக் கற்பிக்கிறான். அந்தப் பாடல் நாட்டின் மலைகளையும், வயல்வெளிகளையும் தன்னுள் கொண்டுள்ளது. அமைதியாக வீழ்ந்த வீரர்களைப் பற்றியது அந்தப் பாடல்...”

நாகரிகத்தின் மேன்மை என்பது வெறும் கட்டிடங்களில் இல்லை, அது சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் கண்ணியத்துடன் நடத்துவதிலேயே உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடுவது என்பது ஒரு புதிய, நீதியான உலகத்தைக் கட்டமைப்பதற்கான போராட்டமாகும். தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.