நிதி ஆயோக் கூட்டத்தில் 10 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார் விஜய்!
11 Jun 2026, 9:06 pm

நிதி ஆயோக் கூட்டத்தில் 10 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார் விஜய்!

புதுதில்லி, ஜூன் 11 - புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 11-ஆவது ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாநில வளர்ச்சி சார்ந்த 10 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர், இளை ஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயி கள் என்ற நான்கு தூண்களை அடிப்ப டையாகக் கொண்டு, தமிழ்நாடு 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதை இலக்கா கக் கொண்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கூட்டாட்சிக் கொள்கையின் மூலமே இந்தியாவை மேம்படுத்த முடியும் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களைப் பெரு மளவில் பாதிக்கும் நீட் தேர்வைத் தமிழக அரசு உறுதியாக எதிர்ப்பதாகத் தெரி வித்தார். எனவே, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படை யிலேயே மருத்துவச் சேர்க்கைக்கு மாநி லங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், புதிய தேசியக் கல்விக் கொள்கை அல்லது மும் மொழிக் கொள்கையைத் திணிக்காமல், தமிழகத்திற்கு வர வேண்டிய ‘ஒருங்கி ணைந்த கல்வி’ திட்டத்தின் நிலுவை நிதி ரூ. 3,284 கோடியை எவ்வித நிபந்தனை யுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர் களுக்குத் திறன் பயிற்சி அளிக்கும் ‘இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்திற்கு’ ஒன்றிய அரசு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன், கோயம்புத்தூரில் மாநிலத்தின் இரண்டா வது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை அமைக்க உரிய அனுமதி வழங்க வேண் டும் என்றும், அதற்குத் தேவையான நிலத்தைத் தமிழக அரசு உடனடியாக வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

மாநிலத்தின் விரைவான பொருளா தார வளர்ச்சியை முன்னிட்டு, சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்றும், செங்கல்பட்டு - திருச்சி மற்றும் திருச்சி - கோவை சாலைகளை ஆறு வழிச்சாலைகளாக மேம்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.

பாக் வளைகுடா பகுதியில் மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாத்து, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கத் தூதரக நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டாfர்.

மதச்சார்பற்ற விழுமியங்களின் சான்றாக விளங்கும் திருக்குறளைத் தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண் டும் என வலியுறுத்திய அவர், குலசேகர பட்டினத்தில் உள்ள விண்வெளி உற்பத்தி மையத்தைத் ‘தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக’ அறிவிக்கக் கோரி னார்.

அத்துடன் ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக் குடிநீர் வழங்கல் திட்டத் திற்கான நிலுவை நிதி ரூ.2,283 கோடி யை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.