தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இளைஞர்களை விஜய் தவறாக வழிநடத்துகிறார்! தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பெ.சண்முகம் விமர்சனம்

12 Mar 2026, 4:20 pm
இளைஞர்களை விஜய் தவறாக வழிநடத்துகிறார்! தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பெ.சண்முகம் விமர்சனம்
<p><strong>இளைஞர்களை விஜய் தவறாக வழிநடத்துகிறார்! தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பெ.சண்முகம் விமர்சனம்</strong></p> <p>சென்னை, மார்ச் 12 - இளைஞர்களை தவெக தலைவர் விஜய் தவறாக வழிநடத்துகிறார் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று (மார்ச் 10) தாம்பரத்தில் தேர்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. தாம்பரம் பகுதிக்குழு சார்பில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு &nbsp;பேசிய பெ.சண்முகம், ஈரான் &nbsp;போர், அதன் தாக்கம் உள்ளி ட்ட அம்சங்களை விவரித் தார். மேலும் அவர் பேசிய தன் சுருக்கம் வருமாறு: திமுக-வுடன் உடன் &nbsp;பட்டும் முரண்பட்டும் செயல்பட்டு வருகிறோம். ஒன்றிய அரசை எதிர்த்து பல்வேறு விவகாரங்களில் திமுக உறுதியாக நிற்கிறது. எனவே, திமுகவிற்கு ஆதர வாக சிபிஎம் நிற்கிறது, எதிர்காலத்திலும் நிற்கும். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தமிழக நலனுக்கு, மக்கள் ஒற்றுமைக்கு எதி ரானது. கலவரம் செய்வதற் கென்றே தனி அமைப்பை வைத்துள்ளது. அந்த கும்பல் கலவரம், மத மோதலை திட்டமிட்டு உரு வாக்குகிறது. அத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க, தமிழகத்தில் பாஜக நுழையக் கூடாது. பாஜகவுடன் அணி சேர்ந்துள்ளவர்கள் பரிதா பத்திற்குரியவர்கள். பீகாரில் ஜனதாதள கட்சியை சேர்ந்த நிதிஷ்குமார் 5 மாதங்களுக்கு முன்பு முதல மைச்சரானார். தற்போது அவரது முதலமைச்சர் பதவியை பாஜக பறித்துக் கொண்டது. கோவாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. அனைத்து எம்எல்ஏ-க்களையும் விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைத்தது. பாஜக நினைத்தால், எந்த நிலைக்கும் சென்று ஆட்சி அமைப்பார்கள். தமிழ கத்தில் வாய்ப்பே இல்லை யென்றாலும், தப்பி தவறி அதிமுக-பாஜக அணி வெற்றி பெற்றால், அது பாஜக ஆட்சியாகத்தான் இருக்கும். எடப்பாடி ஆட்சி அமைப்பார் என்று அதிமுக-வினரே நம்ப மறுக்கின்றனர். நிதிஷ்குமார் நிலைதான் எடப்பாடிக்கும் ஏற்படும். கதை சொல்லும் விஜய் இளைஞர்களை நல் வழிப்படுத்தி தேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அதிகாரத்தை கைப்பற்ற தவெக தலைவர் விஜய் பொய்ப் பிரச்சாரம் செய்து, இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார். ஆட்சிக்கு வந்தால் அனைத்து பிரச்சனைகளை யும் தீர்த்து விடுவேன் என்று கதை சொல்கிறார். இளைஞர்கள் பிரச்சனை யை தீர்க்க ஒரு கோரிக்கை அல்லது மாற்றுத்திட்டத்தை முன்வைத்துள்ளாரா? அவர் எதை செய்தாலும் கண்மூடித்தனமாக ஆத ரிப்பது என்ற நிலையில் இளைஞர்களை உருவாக்கி வைத்திருப்பது நாட்டிற்கு நல்லதல்ல. இத்தகைய மோசமான அரசியல் கால கட்டத்தை தமிழகம் எதிர் கொண்டதில்லை. அறியாமையா? தந்திரமா? தமிழ்நாட்டிற்கும் தில்லிக்கும் நடைபெறும் தேர்தல் என்று முதல மைச்சர் கூறலாமா என்று விஜய் கேட்கிறார். அவரது அரசியல் புரிதல் அவ்வளவு தான். ஒன்றிய பாஜக அரசு மாநிலத்திற்கான நிதியை தர மறுக்கிறது, இந்தியை திணிக்கிறது. அந்த பாஜகவுடன் அதிமுக அணி சேர்ந்துள்ளது. இவற்றை யெல்லாம் எதிர்க்க வேண்டாமா? இதை யெல்லாம் தெரிந்தும் விமர்சிக்க விஜய் மறுப்பது அரசியல் அறியாமையா? தந்திரமா? இளைஞர் சக்தி வீணடிப்பு திமுக செயல்படுத்தி வரும் திட்டங்களின் பெயரை மாற்ற, தொகை உயர்த்தி புதிய திட்டங்களை போல் அறிவிக்கிறார். ஏமாற்றுவதில் கூட எல்லை யில்லாமல் ஏமாற்றுவது என்ற முடிவெடுத்து செயல் படுகிறார். அவரை இழுத்து வந்து (கூட்டணியில்) சேர்த்து ஆட்சி அதிகா ரத்தை கைப்பற்ற சிலர் முயற்சிக்கிறார்கள். விஜ யால் தமிழகத்தில் மாற்ற த்தை ஏற்படுத்த முடி யாது. இளைஞர் சக்தியை வீணடித்துக் கொண்டி ருக்கிறார். மக்கள் நிராகரிக்க வேண்டிய கட்சி &nbsp;தவெக. தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையோடு வாழ, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெற வைப்போம். இவ்வாறு அவர் பேசினார். ஆர்.வேல்முருகன் தென்சென்னை மாவட்டச் செயலாளர் &nbsp;ஆர்.வேல்முருகன் பேசுகை யில், &ldquo;ஊழல் வழக்குகளை வைத்து அதிமுகவை வளைத்துள்ள பாஜக, கரூர் மரணங்களை வைத்து தவெகவை வளைக்க முயற்சிக்கிறது. சனாதன கும்பலையும், அதனை தாங்கிப் பிடித்து வரும் கும்பலையும் தோற்கடிப் போம்&rdquo; என்றார். இந்தக் கூட்டத்திற்கு தாம்பரம் தொகுதிச் செய லாளர் தா.கிருஷ்ணா தலைமை தாங்கினார். தொகுதிக் குழு உறுப்பி னர் ஏ.ஜி.ஜெயவேலு வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் கே.வனஜ குமாரி, செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.விஜயா, மூத்த தலை வர்கள் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, கு.ராஜன்மணி உள்ளிட்டோர் பேசினர். தொகுதிக் குழு உறுப்பினர் ஆர்.பி.கோவிந்தன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.