பாஜக டாஸ்க்கை நிறைவேற்றும் விஜய்
9 Apr 2026, 5:30 am

பாஜக டாஸ்க்கை நிறைவேற்றும் விஜய்

திருமாவளவன் சாடல் தமிழகத்தில் அதிமுக அணிக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம். தமிழகத்தில் சாதி, மத வெறியை தூண்டி, ஒடுக்கப்பட்ட மக்களை பிளவு படுத்தும் பணியை பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஒரு வேளை, அதிமுக ஆட்சிக்கு வந்தால் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு ஏற்பட்டது கதி தான் தமிழகத்திற்கு ஏற்படும். பெரியகுளத்தில் அணியை எதிர்த்து அதிமுக போட்டியிடுகிறது. அதன் தலைவர் கடந்த காலங்களில் எப்பாடி பழனிசாமியுடன் கூட்டு சேருவது நமக்கு போடுவதற்கு சமம் என்றார்.

அதே போல பாமகவின் ஒரு பிரிவு தலைவர் அன்புமணி என்னவெல்லாம் பேசினார். அவர்களை பாஜக ஒன்று சேர்த்துள்ளது. பாஜக கொடுத்த டாஸ்க்கை நடிகர் விஜய் மேற்கொண்டு வருகிறார். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் வாக்கு வங்கிகளை பெற்று விடலாம் என எண்ணியுள்ளார்.

சிறுபான்மை மக்கள் விழிப்புடன் இருந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பெரியகுளத்தில் விசிக வேட்பாளர் பெ.சக்தி வேலை ஆதரித்து நடந்த பிரச்சாரத்தில் திருமாவளவன் பேசினார்.