தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

4 Apr 2026, 4:02 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

விஜய் கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல்

சென்னை: நடைபெறவுள்ள சட்டமன்றத்  தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தமிழக வெற்றிக்  கழக தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.  பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குற்ற வழக்குகளின் விவரம்  எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும்,  திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்பு மனு வில் மட்டும் 2 வழக்குகள் இருப்பதாக  குறிப்பிட்டிருந்ததாகவும் தகவல் வெளியா னது. மேலும் அவரது வயது விவரங்களும் சரியாக குறிப்பிடப்படவில்லை என்றும் தெரி விக்கப்பட்டது. வேட்பாளரின் விவரங்கள் சரியாக குறிப்பிடப்படாவிட்டால் வேட்பு மனு  நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது. ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு நான்கு செட் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்பதால், சரியான தகவல்களுடன் புதிய பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்வதன் மூலம் இந்தப் பிழையை சரிசெய்துவிடலாம் என்று  கூறப்பட்டது. இந்நிலையில் பெரம்பூர்  மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய்  சார்பில் சனிக்கிழமை கூடுதல் பிரமாணப்  பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்பு மனு தாக்கல்  2,000-ஐ கடந்தது

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக் கான வேட்புமனுத் தாக்கலில் முதல் நாளில்  573 பேரும், இரண்டாம் நாளில் 788 பேரும் மனுத் தாக்கல் செய்தனர். மூன்றாம் நாளான  இன்றும் 700 க்கும் மேற்பட்டோர் வேட்புமனுத்  தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் மொத்த  வேட்பு மனு எண்ணிக்கை 2,000-ஐ கடந் துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற் கான கடைசி நாளாக வரும் திங்கட்கிழமை (ஏப்.6) அமைகிறது. கடைசி நாளில் மேலும் அதிக எண்ணிக்கையினர் மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்த லில் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை  ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளும் பாஜக வின் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக  தேசிய தலைவர் நிதின் நபின், இன்றைய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் ராஜ்நாத்  சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன்,  பியூஷ் கோயல், கிஷண் ரெட்டி, எல்.முருகன்,  சுரேஷ்கோபி, அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோஹல். யோகி ஆதித்யநாத் (உ.பி), மோகன் யாதவ் (ம.பி), தேவேந்திர பட்னாவிஸ் (மகா ராஷ்டிரா), பஜன்லால் சர்மா (ராஜஸ்தான்), ஹிமந்த பிஸ்வா சர்மா (அசாம்), ரேகா குப்தா (தில்லி). நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்ட 21  பேர் அடங்கிய பட்டியலையும் வெளியிட்டு உள்ளது.

ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் சவால்

சென்னை: தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கருத்துகளுக்கு பதில் என்ற போர்வையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எதிர்வினையாற்றினார். இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மொழி, கலாச்சார திணிப்பு எந்த விதத்தில்  நடந்தாலும் தமிழும் தமிழர்களும் தொடர்ந்து எதிர்ப்பார்கள்.  மும்மொழிக் கொள்கைதான் எங்கள் கொள்கை, இந்தியை திணிப்போம் என்று தமிழ் மண்ணில் தர்மேந்திர பிரதான்  சொல்லத் தயாரா? மாணவர்கள் அனைவரும் 3 மொழிகளை  கற்க வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் களத்தில் தர்மேந்திர  பிரதான் பேசத் தயாரா?” என்றும் சவால் விடுத்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.