தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு!
5 May 2026, 10:05 pm

தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு!

சென்னை, மே 5 - தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் சட்ட மன்றக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பனையூரி லுள்ள தவெக தலைமை யகத்தில், தவெக எம்எல்ஏ-க்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.

இதில், கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக விஜய் முறைப்படி தேர்வு செய்யப் பட்டார்.

முன்னதாக, ஆட்சி அமைக்க அழைக்கு மாறு தவெக சார்பில் தமிழக ஆளுநருக்கு இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ஆட்சி அமைக்க அழைத்தால் அடுத்த 2 வாரங்களில் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.