தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விஜய் கொடுத்த ‘குடும்பக் கடன்’! பிரமாணப் பத்திரத்தில் அம்பலமான த.வெ.க. வினோதங்கள்! - ஆர்.எம்.பாபு

31 Mar 2026, 4:50 pm
விஜய் கொடுத்த ‘குடும்பக் கடன்’! பிரமாணப் பத்திரத்தில் அம்பலமான த.வெ.க. வினோதங்கள்! - ஆர்.எம்.பாபு

விஜய் கொடுத்த ‘குடும்பக் கடன்’!

பிரமாணப் பத்திரத்தில் அம்பலமான த.வெ.க. வினோதங்கள்!

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ‘தூய்மை வாதம்’ பேசும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப் பத்திரங்கள், பல்வேறு நிதி முரண்பாடுகளையும் வினோதங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.

குடும்பத்திற்குள்  ஒரு ‘கடன்’ லீலை!

விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு 12.60 கோடி ரூபாயும், தந்தை சந்திரசேகருக்கு 3.02 கோடியும், தனது பிள்ளைகளுக்கு தலா சில லட்சங்களையும் ‘கடன்’ கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 25 ஆண்டு கால குடும்ப வாழ்க்கைக்குப் பிறகும், நூற்றுக்கணக்கான கோடி வருமானம் ஈட்டிய பிறகும், மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் ஒரு ரூபாய் சொத்து கூட வாங்காமல், அனைத்தையும் கடனாகக் காட்டியிருப்பது வினோதத்தின் உச்சம். இது வருமான வரிச் சட்டம் 1961 (பிரிவு 60-64) படி, வரி ஏய்ப்பு செய்வதற்கான தந்திரமா என்ற கேள்வி எழுகிறது.

நீட் எதிர்ப்பு -  ஆனால் நீட் மையத்திற்குப் பணம்?

மேடைகளில் ‘நீட்’ தேர்வை கடுமையாக எதிர்க்கும் விஜய், அரியலூரில் உள்ள ‘கோகிலாம்பாள் அறக்கட்டளை’ எனும் கல்வி நிறுவனத்திற்கு 20 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், இது ஒரு நீட் பயிற்சி மையம்! கொள்கை ஒரு பக்கம், முதலீடு மறுபக்கம் என விஜய்யின் இரட்டை வேடம் இதில் அம்பலமாகிறது.

ஆதவ் அர்ஜுனாவின் சிபிஐ சிக்கல்!

கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தனது சகோதரிக்கு 46 கோடியும், விஜய்யின் பிரச்சாரத்தை வடிவமைக்கும் நிறுவனத்திற்கு 68 கோடியும் கடன் கொடுத்துள்ளார். இவர் மீது சிபிஐ (CBI) கொலை முயற்சி மற்றும் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் (105, 110, 223) வழக்குப் பதிவு செய்துள்ளதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். புஸ்ஸி ஆனந்த் மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் உள்ளன.

வருமானத் திரிபுகள்

ஆண்டுக்கு 500 கோடி வருமானம் ஈட்டுவதாகக் கூறப்பட்ட விஜய்யின் 5 ஆண்டு வருவாய் கணக்குகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. ‘மாஸ்டர்’ பட காலத்தில் வெறும் 8 கோடி வருமானம் காட்டியது எப்படி? மீதமுள்ள கருப்புப் பணம் எங்கே? மேலும், 3.44 கோடி ரூபாய் வருமான வரி நிலுவையை இன்னும் கட்டாமல் இழுத்தடிப்பதும் அம்பலமாகியுள்ளது.

கொள்கை வேறு... கல்லா கட்டுவது வேறு! “

நாங்கள் தூய்மையானவர்கள்” என்று முழங்கும் த.வெ.க-வின் அடித்தளமே வரி ஏய்ப்புப் புகார்கள் மற்றும் கிரிமினல் வழக்குகளால் ஆடிக்கொண்டிருக்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்கே வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒரு ‘கார்ப்பரேட்’ பாணி அரசியலை வைத்துக்கொண்டு, இவர்கள் எப்படிப் பொதுமக்களுக்குச் சேவை செய்யப் போகிறார்கள்? ஊழலை ஒழிக்க வந்ததாகச் சொல்பவர்களின் பிரமாணப் பத்திரமே ஊழல் புகார்களுக்கு அச்சாரமாக இருப்பதுதான் வேடிக்கை!

- ஆர்.எம்.பாபு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.