தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வியட்நாமில் பலியான 10 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

14 Jul 2026, 9:50 pm
வியட்நாமில் பலியான 10 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

வியட்நாமில் பலியான 10 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

சென்னை, ஜூலை 14 - வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தமிழ்நாடு வந்தடைந்தன.

வியட்நாம் விபத்தில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங் களைச் சேர்ந்த மொத்தம் 15 இந்தி யர்கள் பலியாகியிருந்த நிலையில், அவர்கள் அனைவரின் உடல்களும் திங்கட்கிழமை இரவு மும்பை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு சட்டபூர்வ நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் அந்தந்த மாநில பிரதிநிதிகளிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

அதனடிப்படையில், திரு வண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிசங்கர் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினய் குமார் ஆகியோரின் உடல்கள், செவ்வாய்க்கிழமை காலையிலும், சென்னை மாவட்டம், அகரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடி பூண்டியை சேர்ந்த பாபு ஆகியோரின் உடல்கள் பகலிலும் சென்னை விமான நிலையம் கொண்டுவரப் பட்டு, அரசு ஏற்பாடு செய்திருந்த வாக னங்கள் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதேபோல, திருச்சியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, பாலாஜி மற்றும் அழகு ராஜன் ஆகிய மூவரின் உடல்கள் செவ்வாயன்று காலையும், தருமபுரியைச் சேர்ந்த செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருக பிரபு மற்றும் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோரின் உடல்கள் பிற்பகல் 2 மணிக்கும் கோவை விமான நிலையம் வந்தடைந்தன.

பின்னர், முன்னதாகவே தயார் நிலை யில் வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்திகள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.