தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 15 இந்தியர்கள் பலியான துயரம்! சுற்றுலாப் படகு கவிழ்ந்து வியட்நாமில் விபத்து

11 Jul 2026, 9:25 pm
தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட  15 இந்தியர்கள் பலியான துயரம்! சுற்றுலாப் படகு கவிழ்ந்து வியட்நாமில் விபத்து

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 15 இந்தியர்கள் பலியான துயரம்! சுற்றுலாப் படகு கவிழ்ந்து வியட்நாமில் விபத்து

ஹனோய், ஜூலை 11 - வியட்நாமின் புகழ்பெற்ற சுற்று லாத் தலமான பு குவோக் (Phu Quoc) தீவு அருகே சனிக்கிழமை யன்று சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 15 இந்திய சுற்று லாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில், கிராப்பட்டி யைச் சேர்ந்த அழகுராஜன் (வயது 36), திருவானைக்காவல் கீழக் கொண்டையம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி மற்றும் ஒருவர் என திருச்சியைச் சேர்ந்த 3 பேர், திண் டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருகபிரபு (44) ஆகியோரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அழகுராஜன் தனியார் மொபைல் நிறுவன மேலாளராகவும், முருக பிரபு மொபைல் நிறுவன விற்பனை யாளராகவும் பணியாற்றி வந்தவர கள். இவர்களின் சிறந்த வணிகச் செயல்பாட்டுக்கான வெகுமதியாக- மொபைல் நிறுவனத்தால், வியட் நாம் சுற்றுலாவுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளனர். அவ்வாறு சுற்றுலா சென்ற இடத்திலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். விபத்துக் குள்ளான படகில் பயணித்தவர் களில், அழகுராஜன், பாலாஜி, முருக பிரபு உட்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள் 10 பேர் இருந்ததாகவும் கூறப் படுகிறது. இந்த விபத்தில் பலியான மேலும் 7 பேர்களில், 5 பேர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் 5 என்றும், 2 பேர் கேர ளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. வியட்நாம் உள்ளூர் அதிகாரிகளு டன் தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கண் காணித்து வருவதாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரி வித்துள்ளது. படகுப் பயணம்! வியட்நாமின் ஹோன் மே ரூட் (Hon May Rut) தீவிலிருந்து ஆன் தோய் (An Thoi) துறைமுகத்திற்கு 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் அதி வேகப் படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது, கடல் சீற்றம் காரண மாக, கரையில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் படகே நிலைகுலைந் துள்ளது. அப்போது படகில் இருந்த அனைவரும் கடலில் தூக்கி வீசப் பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 21 பேர் மீட்பு! விபத்தில் சிக்கியவர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயம டைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்து வமனைகளில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். கடலில் படகு கவிழ்ந்தபோது அங்கிருந்த பிற படகுகள் விரைந்து வந்து பயணிகளை மீட்கும் பணி யில் ஈடுபட்டன. அதன் பிறகு வியட் நாம் கடலோரக் காவல் படை, கடற் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும், அதிவிரைவாக மீட்புப் பணியில் ஈடுபட்டு பயணி களைக் காப்பாற்றியுள்ளனர். தீவிர விசாரணை! விபத்தின்போது பல பயணி கள் படகிற்கு உள்ளேயே சிக்கிக் கொண்டதால், அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்துக்கான முழுமையான கார ணம் இன்னும் தெரியவில்லை. அது குறித்து வியட்நாம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வியட்நாமின் பு குவோக் தீவா னது, அதன் அழகான கடற்கரை களுக்காக உலகம் முழுவதும் பிர பலமான இடமாகும். ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்று லாப் பயணிகள் இங்கு வருகை தரு கின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், வியட்நாமின் ஹா லாங் விரிகுடா வில் ஏற்பட்ட படகு விபத்தில் 39 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக் கது.

பிரதமர் மோடி, முதல்வர் விஜய் இரங்கல்!

படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு பிரத மர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக தேவையான உதவிகளை இந்திய தூதரகம் வழங்கும் என்று கூறி யுள்ளார். “தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்” என்று கூறியிருக்கும் தமிழக முதல்வர் விஜய், உயிரி ழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர இந்திய தூதர கம் மூலம் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு!

வியட்நாம் துயரச் சம்பவம் குறித்து இந்தியத் தூதரகம், தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேவையான தகவல்களை வழங்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கவும் வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ‘ஹோ சி மின்’ நகரில் உள்ள இந்தி யத் துணைத் தூதரகத்தில் அவசரக் கட்டுப் பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ள தாக தெரிவித்துளளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அல் லது அவர்களது உறவினர்கள், ஹோ சி மின் நகர் துணைத் தூதரகத்தை +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஆகிய எண்கள் மூலமாகவும். ஹனோய் தூத ரகத்தை +84 91 308 9165 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.