தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

23 ஆண்டு காலப் போராட்டத்திற்கு வெற்றி “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” அமல் – வேலைநிறுத்தம் வாபஸ்!

3 Jan 2026, 2:20 pm
23 ஆண்டு காலப் போராட்டத்திற்கு வெற்றி  “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” அமல் – வேலைநிறுத்தம் வாபஸ்!
<p><strong>23 ஆண்டு காலப் போராட்டத்திற்கு வெற்றி&nbsp;&nbsp;&ldquo;தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்&rdquo; அமல் &ndash; வேலைநிறுத்தம் வாபஸ்!</strong></p> <p>சென்னை, ஜன. 3 &ndash; தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை உள்ளடக்கிய &ldquo;தமிழ்நாடு உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்&rdquo; (TN Assured Pension Scheme - TNAPS) என்ற புதிய திட்டத்தை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை அறிவித்தார். இதனை &nbsp;ஏற்று, ஜனவரி 6 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பு திரும்பப் பெற்றுள்ளது. முதலமைச்சரின் வரலாற்றுச் &nbsp;சிறப்புமிக்க அறிவிப்பு கடந்த 2003 ஏப்ரல் 1 முதல் அமலில் இருந்த புதிய &nbsp;ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்யக் கோரி அரசு &nbsp;ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இது குறித்து ஆய்வு செய்ய கூடுதல் தலைமைச் செயலா ளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு வின் பரிந்துரைகளை ஏற்று, முதலமைச்சர் இந்த அறி விப்பை வெளியிட்டுள்ளார். புதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் * 50% ஓய்வூதியம்: அரசு ஊழியர்கள் கடைசியாகப் பெற்ற &nbsp;ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. * அகவிலைப்படி உயர்வு: பணியாளர்களுக்கு இணை யான அகவிலைப்படி உயர்வு 6 மாதங்களுக்கு ஒருமுறை &nbsp;ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும். * குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரர் மறைந்தால், அவ ரது குடும்பத்தினருக்கு 60 சதவீத ஓய்வூதியம் வழங்கப் படும். * ரூ.25 லட்சம் பணிக்கொடை: ஓய்வு பெறும்போது அல்லது பணியின் போது உயிரிழக்க நேரிட்டால், பணிக் காலத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை பணிக் கொடை (Gratuity) வழங்கப்படும். * கருணை ஓய்வூதியம்: சிபிஎஸ் திட்டத்தில் இணைந்து, &nbsp;ஏற்கனவே ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர் களுக்குச் &lsquo;சிறப்புக் கருணை ஓய்வூதியம்&rsquo; வழங்கப்படும். இத்திட்டத்திற்காகத் தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.11,000 கோடி பங்களிப்புத் தொகையையும், கூடுதலாக &nbsp;ரூ. 13,000 கோடியையும் ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிப்பு ஊட்டி மகிழ்ந்த முதலமைச்சர் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப் பினர் முதலமைச்சரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது முதலமைச்சர் சங்கத் தலைவர்களுக்கு இனிப்பு ஊட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். சங்கங்களின் கருத்துகள் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் செய்தியா ளர்களிடம் பேசுகையில், &ldquo;23 ஆண்டுகால ஓய்வூதிய இரு ளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை &nbsp;முழுமனதோடு வரவேற்கிறோம். முதலமைச்சர் மீதான நம்பிக் கையில் ஜனவரி 6 போராட்டத்தை ரத்து செய்கிறோம்&rdquo; என்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சங்கத்தின் பொதுச் செயலாளர் சோமசுந்தரம் கூறுகை யில், &ldquo;2003 முதல் நாங்கள் நடத்தி வந்த வீரஞ்செறிந்த போராட் டங்களுக்குப் பலன் கிடைத்துள்ளது. அரசின் இந்த அறி விப்பை வரவேற்கும் அதே வேளையில், சாலைப் பணியா ளர்களின் 41 மாத ஊதிய நிலுவை மற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம் போன்ற கோரிக்கைகளையும் அரசு விரைவில் நிறைவேற் றும் என நம்புகிறோம்&rdquo; என்றார். ஓய்வூதியர் சங்கம் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத் &nbsp;தலைவர் ந. ஜெயச்சந்திரன் மற்றும் பொதுச் செயலாளர் கி. &nbsp;இளமாறன் ஆகியோர், இந்தத் திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்தனர். மேலும், 70 வயது கடந்தவர்களுக்கு 10 &nbsp;சதவீத கூடுதல் ஓய்வூதியம் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் &nbsp;திட்டக் குறைபாடுகளைக் களைவது போன்ற கோரிக்கை களையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.