தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எங்கே போனது வேட்டவலம் ஏரி! - டி. ரவீந்திரன்

10 Jul 2026, 7:09 pm
எங்கே போனது வேட்டவலம் ஏரி! - டி. ரவீந்திரன்

எங்கே போனது வேட்டவலம் ஏரி! - டி. ரவீந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சி பகுதியில் 294 புல எண்ணில் 7.08 ஏக்கர் பரப்பளவில் ‘நீர்த்தாங்கல் ஏரி’ அமைந்துள்ளது. பல நூறு ஆண்டு கள் மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு 16 மீட்டர் அகலத்தில் நீர்வரத்து ஓடையும், 26 மீட்டர் அகலத்தில் நீர் வெளியேறும் ஓடையும் உள்ளன. இந்த ஏரியிலிருந்து மழைக்காலங் களில் வெளியேறுகிற தண்ணீர், இதன் கீழ்ப்பகுதியில் உள்ள அடுத்தடுத்த ஏரிகளுக்குச் சென்றடைகிறது. இப்பகுதியை நேரில் சென்று பார்த்த போது, அந்த ஏரியில் 3 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளதையும், அந்தத் தண்ணீரில் தாமரைச் செடிகளும் பூக்க ளும் பூத்துக் குலுங்குவதையும் பார்த் தோம். அப்பகுதியில் மேய்ச்சலில் உள்ள ஆடு, மாடுகள் இந்த ஏரியில் தான் தண்ணீர் குடிக்கின்றன. நீர்த்தாங்கல் ஏரியின் கீழுள்ள நூற்றுக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங் களுக்கு நேரடிப் பாசனத்திற்கும், அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் இந்த ஏரி மிக முக்கிய ஆதாரமாகப் பயன்படுகிறது.

முறைகேடாக பத்திரப் பதிவு

இத்தகையச் சூழலில், திருச்சியில் வசித்து வரும் பாண்டுரங்கன் என்பவர் வேட்டவலம் நீர்த்தாங்கல் ஏரியில் சாகு படி செய்வதாகப் பொய் அடங்கல் பெற்றுள்ளார். அதாவது, பாண்டுரங் கன் 294 புல எண் கொண்ட ஏரி நிலத்தில் கம்பு சாகுபடி செய்துள்ளார் என்றும், “இந்த இடத்தை/நிலத்தைப் பத்திரப்பதிவு செய்வதற்கு மட்டும் சான்று வழங்குகிறேன்” என்றும் வேட்ட வலம் கிராம நிர்வாக அலுவலர் க. ராஜீவ் காந்தி சான்று வழங்கியுள்ளார். இந்தச் சான்றைப் பயன்படுத்திப் பாண்டுரங்கன் என்பவர் மேரி ஸ்டெல்லா, போர்சியா, மோகன், கமல க்கண்ணன், ஏழுமலை ஆகியோர் பெயரில் நீர்த்தாங்கல் ஏரியின் 5.32 ஏக்கர் பரப்பளவை கடந்த 20-01-2026 அன்று முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

ஜே.சி.பி-யை விரட்டியடித்த விவசாயிகள்

கடந்த மாதம் ஜே.சி.பி வாகனங் களுடன் வந்த ஒரு கும்பல், நீர்த்தாங் கல் ஏரியை மண் கொட்டி நிரப்பும் பணி யில் ஈடுபட்டுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள் உடனடியாக ஒன்றுதிரண்டு, அந்த ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தி, ஜே.சி.பி உள்ளிட்ட அனைத்தையும் ஏரிப் பகுதியிலிருந்து வெளியேற்றியுள்ளனர். ஏரியை விலைக்கு வாங்கியதாகச் சொல்லுகிற நபர்கள், நேராக வேட்டவலம் காவல் நிலையம் சென்று, “நாங்கள் எங்கள் நிலத்தைச் சமப்படுத்தும் பணியைச் செய்து கொண்டிருந்தபோது, விவ சாயிகள் திரண்டு தடுத்துவிட்டார்கள்; ஆகவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காவல் நிலை யத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்ட வேட்ட வலம் காவல் நிலைய ஆய்வாளர், நேரடியாக இடத்தைப்பார்வையிடச் சென்றுள்ளார். காவல்துறையினர் ஏரிக்குச் சென்றபோது, அங்கே ஆடு கள் தண்ணீர் குடிப்பதையும், மாடுகள் மேய்வதையும் பார்த்தனரே தவிர, அங்கு விவசாய நிலத்தையோ அல் லது அதில் கம்பு பயிரையோ காண வில்லை. “விவசாய நிலத்தையும் காணோம், அதிலே கம்பு பயிரையும் காணோம்” என்று சொல்லிவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். மேலும், “இந்தப் புகாரை ஏற்க முடி யாது, இது சிவில் பிரச்சனை, நீங்கள் நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்ளுங் கள்” என்று காவல் ஆய்வாளர் கூறிவிட்டார்.

அதிகாரிகளின் கூட்டுச் சதியும் விவசாயிகள் சங்கத்தின் ஆய்வும்

திருச்சியில் வசிக்கும் பாண்டுரங் கன் என்பவர் வேட்டவலம் நீர்த்தாங்கல் ஏரியையே விற்பனை செய்த விபரம், அவர்கள் ஏரியை மண்போட்டு மூட வந்தபோதுதான் அப்பகுதி விவசாயி களுக்கே தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா தலை வர் எம். செந்தில்குமார், செயலாளர் பெ. லட்சுமணன், வழக்கறிஞர்கள் அபி ராமன், திருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகி கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், மாவட்டத் தலை வர் டி. கே. வெங்கடேசன், சிபிஐ(எம்) தாலுகா செயலாளர் வாசுகி ஆகியோர் கடந்த 05-07-2026 அன்று நேரில் சென்று கள ஆய்வு நடத்தினர். அப்பகுதி விவசாயிகள் சார்பிலும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.லட்சுமணன் சார்பிலும் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து விரிவான மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில், “வேட்டவலம் நீர்த்தாங்கல் ஏரியைப் பத்திரப்பதிவு செய்து முறைகேடாக விற்பனை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடியே செய்யாத ஏரி நிலத்தில் கம்பு பயிரிடப்பட்டிருந்ததாகப் பொய் சான்றிதழ் (அடங்கல்) வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் க. ராஜீவ் காந்தி மீது கடுமையான துறை சார்ந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். விவசாயத்திற்கும் விவ சாயிகளுக்கும் பயன்படக்கூடிய நீர்த்தாங்கல் ஏரியை அரசு உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும், அரசு நிதி ஒதுக்கீடு செய்து, நீர்த்தாங்கல் ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி, இந்த நீர்நிலையை மேம்படுத்திட வேண்டும்” என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் மூலம் விசாரணைக்கு உத்தரவிட்டுள் ளார். இதில் முறையான, நேர்மை யான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

வீடிழந்த ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குக!

மற்றொரு முக்கியப் பிரச்சனை யாக, வேட்டவலம் நகரில் சாலை விரி வாக்கத்தின் போது ஏழை எளிய மக்க ளின் 53 வீடுகள் இடிக்கப்பட்டன. பாதி இடிக்கப்பட்ட நிலையிலும், முக்கால் வாசி இடிக்கப்பட்ட நிலையிலும், முழு மையாக இடிக்கப்பட்ட நிலையிலும் தற்போது மக்கள் இருக்க இடம் இல்லா மல் தவிக்கின்றனர். குழந்தைகளை யும், வயதான தாய், தந்தையரையும் வைத்துக்கொண்டு ஏழை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். மாடி வீடுகள் உட்படப் பல வீடு கள் இடிக்கப்பட்டுள்ள போதிலும், இவர்களுக்கு இதுவரை எந்தவொரு மாற்று மறு குடியமர்வு வசதியும் செய்து தரப்படவில்லை. மனிதாபிமான அடிப்படையில் கூட அரசும் மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை அணுகவில்லை என்பது வேதனைக்குரியது.

தற்போது வேட்டவலம் பேரூராட்சி பகுதியில், நகரத்திற்கு வெளியே புதி தாகப் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் புறவழிச் சாலையை ஒட்டிய பகுதியில் ஆறு இடங்களில் சுமார் 28 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலங்களில் வசதி படைத்தவர்கள் செட் அமைத்துக் கொள்வதற்கும், சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொள்வதற்கும் வேட்ட வலம் கிராம நிர்வாக அலுவலர் க. ராஜீவ் காந்தி அனுமதித்து வருகிறார்.

வேட்டவலம் பேரூராட்சியை ஒட்டிய பகுதியில் குன்று, கல்லாங்குத்து, தீர்வை ஏற்படாத தரிசு என மொத்தம் 224 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. எனவே, சாலை மேம்பாட்டுக்காக வீடு கள் இடிக்கப்பட்டு, அதனால் பாதிக்கப் பட்டு தவிக்கும் அந்த 53 குடும்பங் களுக்கும், வேட்டவலம் பேரூராட்சி யில் உள்ள வீடற்ற இதர ஏழை மக்க ளுக்கும் இந்த நிலங்களில் உடன டியாக வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்துகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.