தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் தோழர் இ.கெங்கா துரை காலமானார்! சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேரில் அஞ்சலி

24 Jun 2026, 10:56 pm
வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர்  தோழர் இ.கெங்கா துரை காலமானார்! சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேரில் அஞ்சலி
<p><strong>வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் தோழர் இ.கெங்கா துரை காலமானார்! சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேரில் அஞ்சலி</strong></p><p>சென்னை, ஜூன் 24 - தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் இ. கெங்கா துரை (66) செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) மதி யம் 12 மணியளவில் உடல்நலக்குறை வால் காலமானார். ஆவடி சேக்காடு பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லி பாபு, சிபிஎம் வடசென்னை மாவட்டச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், முன் னாள் மாநிலக்குழு உறுப்பினர் பா.சுந்தர ராஜ், மூத்த தோழர் செல்வராஜ் உள்ளிட் டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் மா. பூபாலன், எம். ராபர்ட் ராஜ், சரவணன், நடராஜன், ஆர்.ராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் வி.குப்பு சாமி, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமி ழரசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சேக்காடு பகுதியில் உள்ள மயானத்தில் புதனன்று (ஜூன் 24) நல்லடக்கம் செய்யப்பட்டது. 1998 முதல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, ஆவடி பகுதிக்குழு உறுப்பின ராக, கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவராக மக்கள் பணியை மேற்கொண்ட தோழர் இ. கெங்கா துரை, மாநிலம் முழுவதும் பழங்குடியின மக்களை திரட்டி போராட்டங்களை முன் னெடுத்தவர் ஆவார். தற்போது, தமிழ் நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராகவும் தற்போது வரை செயல் பட்டு வந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.