மேலானூரில் வேட்டைக்காரன் பழங்குடி சங்க கிளை துவக்கம்
1 Mar 2026, 5:56 pm
<p><strong>மேலானூரில் வேட்டைக்காரன் பழங்குடி சங்க கிளை துவக்கம்</strong></p>
<p>திருவள்ளூர், மார்ச் 1- திருவள்ளூர் அருகில் உள்ள மேலானூர் கிராமத்தில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் புதிய கிளை ஞாயிறன்று (மார்ச் 1), துவங் கப்பட்டது. சங்க கொடியை மாநில பொதுச் செயலா ளர் இ.கங்காதுரை ஏற்றிவைத்து உரையாற்றி னார். பெயர் பலகையை மாநிலத் துணைத் தலைவர் ஆறுமுகம் திறந்து வைத்து பேசினார். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணை செயலா ளர் ஆர். தமிழ்அரசு, வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ராஜா. மாநில குழு உறுப்பினர்கள் கணேசன், கண்ணாயிரம் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள்தேர்வு தலைவராக ராஜ்குமார், செயலாளராக சத்யா, பொருளாளராக செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
