தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெற்றிப் பயணம்: மாற்றுத் திறனாளிகளைப் புறக்கணிப்பதா?

4 Oct 2026, 11:06 pm
வெற்றிப் பயணம்: மாற்றுத் திறனாளிகளைப் புறக்கணிப்பதா?

வெற்றிப் பயணம்: மாற்றுத் திறனாளிகளைப் புறக்கணிப்பதா?

நாமக்கல், அக். 3 –தமிழக அரசின் புதிய “வெற்றிப் பயணம்” இலவசபேருந்து திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமைக்குத் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC) மாநிலக்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாமக்கல்லில் ஞாயிறன்று நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்திற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ. வில்சன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி, பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி, துணைத் தலைவர் வி. ராதாகிருஷ்ணன், செயலாளர்கள் எஸ். பகத்சிங், எம். குணசேகரன், ப. ராஜேஷ் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். கூட்டத்தின் தொடக்கத்தில் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எம்.ஆர். முருகேசன் அனைவரையும் வரவேற்ற நிலையில், நிறைவாக ஏ.டி. கண்ணன் நன்றி கூறினார்.இலவசப் பேருந்து திட்டத்தில் இணைத்திடுக!அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுடன் மாற்றுத்திறனாளிகளும் தமிழகம்

முழுவதும் இலவசமாகப் பயணிக்கலாம் எனத் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில்,அக்டோபர் 2 முதல் நடைமுறைக்கு வந்த இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் விடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. முதல்வர் அறிவித்தபடி அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் இத்திட்டத்தின் கீழ் உடனடியாக இணைத்து அவர்களுக்கான இலவச பேருந்து பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என மாநிலக்குழு வலியுறுத்தியது.

ஊரக வேலை, உதவித்தொகை

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தொடர்ந்து 125 நாட்கள் வேலை வழங்குவதுடன், கடந்த சில மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்ய இயலாதவர்களுக்கு மாற்று வழிமுறைகளைக் கண்டறிந்து தடையின்றிப் பணி வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும். புதிதாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்துக்கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், கடந்த செப்டம்பர் மாத மாதாந்திர உதவித்தொகை இன்னும் கிடைக்கப் பெறாதவர்களுக்கும் தடையின்றி உடனடியாகத் தொகையை வழங்க அரசு

நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் உட்பட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்களை வெறும்மனுக்கள் வாங்கும் சடங்காக மாற்றாமல், முறையான தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும்வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.