வெற்றி கொள்வாய்! - (கோவி.பால.முருகு)
26 Sept 2026, 8:34 pm

வெற்றி கொள்வாய்! - (கோவி.பால.முருகு)

கண்ணின் மணியாய் இருக்கிறாயே கண்ணம்மா! என்னில் உன்னைக் காண்கிறேனே பொன்னம்மா! பெண்ணின் பெருமை பெற்றவளே செல்லம்மா! பேசும் மொழியில் பெருமைமிகக் கொள்ளம்மா!

எதையும் எதற்கு ஏனென்று கேட்பாயே! எவர்சொல் லாயினும் பகுத்தறிந்து பார்ப்பாயே! அறிவியல் பார்வை அற்றவற்றை மறுப்பாயே! அறிவே முக்கியம் அதனாற்றல் அறிவாயே!

வள்ளலார் வள்ளுவர் வகுத்தவழி கற்பாயே! தெள்ளு தமிழைத் திகட்டாமல் படிப்பாயே! உள்ளத் தூய்மை வாய்மையால் காண்பாயே! ஊறும் கருணை மனிதநேயம் கொள்வாயே!

கல்வியை வரமாய்க் காண்பவளே பெண்ணம்மா கல்வியைப் பெண்கள் கற்பதுதான் சிறப்பம்மா! மெல்லினம் இல்லை வல்லினமே நீயம்மா! மேன்மை தருஞ்செயல் உன்னிடம்தான் இருக்குதம்மா!

துள்ளல் நடையில்! துளங்குகின்ற வீரம்மா! துணிச்சல் மிகுந்த தொண்டுசெய்து பாரம்மா! கள்ள மில்லா மனத்தவளே! நீயம்மா! காணும் வெற்றியைக் கடைமையிலே கொள்ளம்மா!